பேச்சிலாரிட்டி ஷோ நடத்த வரும் மல்லிகா ஷெராவத்
மும்பை: பாலிவுட் உலகில் கவர்ச்சிப் புயலாய் வலம் வரும் மல்லிகா ஷெராவத் புதிய ரியாலிட்ஷோ நடத்த ஒப்பந்தமாகியுள்ளார்.
ஸ்டார் பிளஸ் சேனலில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பேச்சுலரிட்டி ஷோவைத்தான் நடத்தப் போகிறார் மல்லிகா ஷெகாவத்.
சூடான கேள்விகள்.... பாலிவுட் நட்சத்திரங்கள் என களைகட்டப் போகும் இந்த நிகழ்ச்சி பற்றி அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

ரொமான்ஸ் நிகழ்ச்சி
பேச்சிலர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த ரியாலிட்டிஷோவில் மல்லிகா கேட்கும் கேள்விகள் செம சூடானவையாக இருக்குமாம்.

பேச்சிலாரிட்டி இந்தியா
இந்த நிகழ்ச்சியின் பெயர் பேச்சிலாரிட்டி இந்தியா- மேரே க்யாலான் கி மல்லிகா ('The Bachelorette India - Mere Khayalon Ki Mallika') கவர்ச்சி உடையில் வலம் வந்த மல்லிகா இதில் மணப்பெண் அலங்காரத்தில் வந்தாலும் வரலாம்.

பாலிவுட் நட்சத்திரங்கள்
இந்த ரியாலிட்டிஷோவில் பாலிவுட் இளம் நட்சத்திரங்கள் அயூப் கான், சமீர் சோனி ஆகியோரும் பங்கேற்க உள்ளனராம்.

டேட்டிங் ஷோ
அமெரிக்காவின் டேட்டிங் ஷோவான ‘தி பேச்சிலர்' ரியாலிட்டி நிகழ்ச்சியைப் போன்றது. மல்லிகா நடத்தும் பேச்சிலாரிட்டி இந்தியா நிகழ்ச்சி.

ஏடாகூடமான கேள்வி
30 பேச்சிலர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மல்லிகா கேட்கும் கேள்விதான் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. குறிப்பாக திருமணத்துக்கு முன்பே உறவு கொண்டதுண்டா? போன்ற கேள்விகள் இந்த நிகழ்ச்சியில் சர்வ சாதாரணம்.

ஆகஸ்ட்டில் ஒளிபரப்பாகும்
மல்லிகா கூச்சமில்லாமல் கேள்வி கேட்டு விடுவார். பாவம், அப்பாவி இளைஞர்கள் தான் பதில் சொல்ல திண்டாடப் போகிறார்கள். இந்த நிகழ்ச்சி ஸ்டார் ப்ளஸ் சேனலில் ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











