கணவரை விட்டுட்டு வா.. துபாயில் ஜாலியா இருக்கலாம்.. தொழிலதிபர் செய்த அசிங்கம்.. பஞ்சராக்கிய நடிகை

சென்னை: பிரபல நடிகை ஒருவரிடம் தொழிலதிபர் அநாகரீகமாகவும், அசிங்கமாகவும் நடந்து கொண்டுள்ளார். இதை அந்த நடிகை இணையத்தில் வெளிச்சம் போட்டு காட்டி தொழிலதிபரின் மானத்தை வாங்கி உள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர் சனா அல்ஃதாப். இவர் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர், இவர் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான விக்ரமாதித்தன் படத்தில் துல்கர் சல்மானின் சகோதரியாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து தமிழில் சென்னை 28 பார்ட் 2, ஆர்.கே.நகர், பஞ்சராக்ஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு ஹக்கீம் ஷாஜகான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார் நடிகை சனா அல்ஃதாப்.

actress Sana Althaf
Photo Credit:

நடிகை சனா அல்ஃதாப்: இந்நிலையில், சென்னையை சேர்ந்த பாலாஜி என்கிற தொழிலதிபர், சனா அல்தாஃபுக்கு தொடர்ந்து மெசேஜ் மற்றும் மின்னஞ்சல் அனுப்பி அவருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தொழிலதிபரின் தொலை தாங்க முடியாத நடிகை, தனக்கு வந்த அநாகரீகமான மெசேஜ்களை ஸ்கிரீன் ஷாடாக எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், அந்த தொழிலதிபர் அன்புள்ள சனா.. எப்படி இருக்கிறீர்கள்?.. நான் சென்னையில் சேர்ந்த பாலாஜி, ஒரு பிரபல தொழிலதிபர். நான் உங்களுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன். இதற்கு உங்களுக்கு எவ்வளவு பணத்தை நான் தர வேண்டும் என்று சொல்லுங்கள். மேலும், எப்போது என்னுடன் வர உங்களால் முடியும், என்பதையும் சொல்லுங்க என்றும், உங்களுடன் மாலத்தீவு அல்லது துபாய்க்கு சென்று ஜாலியாக நேரத்தை செலவழிக்க தயாராக இருக்கிறார். இந்த ஆபஃர் பற்றி நன்றாக யோசியுங்கள் என்று தொடர்ச்சியாக பல மின்னஞ்சலை அனுப்பி சனா அல்ஃதாபுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

தொழிலதிபரின் டார்ச்சர்: இந்த ஸ்கிரீன் ஷாட்களை நடிகை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, எவ்வளவு ரொமான்டிக்கான ஆஃபர் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து கொந்தளித்த இணையவாசிகள் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கதாநாயகிகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்கிற டார்ச்சர் தொடர்ந்து வருவதாகவும், அது திருமணம் ஆனவராக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி அது மாறுவதே இல்லை என திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: actress
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X