கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரம்...கதை கேட்கும் ஐஸ்வர்யா அர்ஜுன்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜூன் இப்பொழுது ஹாட்டான உடையில் கிளாமராக நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

சென்னை : விஷால் ஹீரோவாக நடித்த பட்டத்து யானை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன். அதை தொடர்ந்து அர்ஜுன் இயக்கி தயாரித்த சொல்லிவிடவா படத்தில் கதாநாயகியாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார், தற்போது ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்டில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

 அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா

அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா

தென்னிந்திய சினிமாவில் நடிகர் நடிகைகளின் வாரிசுகளும் தொடர்ந்து அறிமுகமாகி கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் நடிகர் அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக உள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு பூபதிபாண்டியன் இயக்கத்தில் வெளியான பட்டத்து யானை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 முதல் படத்திலேயே க்யூட்டான நடிப்பை

முதல் படத்திலேயே க்யூட்டான நடிப்பை

விஷால் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. முதல் படத்திலேயே க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்ற ஐஸ்வர்யா அர்ஜூன் அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது

 இரு மொழிகளிலும் வெளியானது

இரு மொழிகளிலும் வெளியானது

பட்டத்து யானை வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அர்ஜுன் இயக்கி தயாரித்த சொல்லிவிடவா படத்தில் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்தார் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளிலும் வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது.

 மிகப்பெரிய தோல்வி படமாக

மிகப்பெரிய தோல்வி படமாக

கன்னடத்தில் இந்த படம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. கன்னடம் போலவே தமிழிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தமிழில் இந்தப் படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது

 கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடிக்க முடிவு

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடிக்க முடிவு

இந்நிலையில் அடுத்ததாக நல்ல கதையை தேர்வு செய்து தமிழில் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற மும்முரத்தில் இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் தொடர்ந்து கதைகளை கேட்டு வருகிறார் மேலும் அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

Recommended Video

Vijayalakshmi ஜெயித்த Survivor பரிசு 1கோடி பணம் இன்னும் கைக்கு வரல!! | காரணம் என்ன??
 கவர்ச்சியான சிகப்பு உடையில் செம கிளாமராக நடனம்

கவர்ச்சியான சிகப்பு உடையில் செம கிளாமராக நடனம்

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் இந்த நிலையில் ஹாட் ட்ரெஸ்ஸில் படுகவர்ச்சியான சிகப்பு உடையில் செம கிளாமராக நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அது இப்போது இணையத்தில் வைரல் ஆகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X