வெறுப்பை கக்கிவிட்டு சாவகாசமாக ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பெண் பத்திரிகையாளர்
Recommended Video

மும்பை: நடிகை ப்ரியங்கா சோப்ரா பற்றி கண்டபடி செய்தி வெளியிட்ட அமெரிக்க இணையதள எழுத்தாளர் மரியா ஸ்மித் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல இணையதளமான தி கட்-இல் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணம் பற்றி ஒரு செய்தி வெளியானது.
மரியா ஸ்மித் என்பவர் ப்ரியங்காவை விளாசி எழுதியிருந்தார். ப்ரியங்கா ஒரு ஏமாற்று நடிகை, நிக்கை கட்டாயப்படுத்தி உள்நோக்கத்துடன் திருமணம் செய்து கொண்டார் என்று வெறுப்பை கக்கியிருந்தார் மரியா.

மன்னிப்பு
மரியாவின் செய்தியை பார்த்த திரையுலக பிரபலங்கள், நெட்டிசன்கள் என்று அனைவரும் அவரையும், தி கட் இணையதளத்தையும் விளாசினார்கள். இதையடுத்து அந்த செய்தி நீக்கப்பட்டது. இந்நிலையில் தான் எழுதிய செய்திக்காக மரியா ஸ்மித் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தி கட்
என் வார்த்தைகளால் காயப்படுத்தியதற்காக ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் மற்றும் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இனவெறியை ஆமோதிக்கவில்லை. நான் எழுதியதற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். நான் தவறு செய்துவிட்டேன். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார் மரியா.
விரோதம்
மரியா ஏற்கனவே ப்ரியங்கா சோப்ராவுக்கு எதிராக ட்வீட் போட்டுள்ளார். அதை நெட்டிசன்கள் தற்போது ஷேர் செய்து வருகிறார்கள்.
ஏமாற்றம்
மரியா சாவகாசமாக மன்னிப்பு கேட்டுள்ளதை பார்த்தால் அவர் தனது அலுவலகத்தில் கொடுத்த அழுத்தத்தால் இறங்கி வந்துள்ளாரே தவிர அவராக மன்னிப்பு கேட்கவில்லை என்று விளாசுகிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











