'அவருடன் நடிக்க மறுத்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு'.. காலம் கடந்து பீல் செய்யும் இலியானா!
ஜூனியர் என்.டி.ஆர் நடித்த சக்தி படம் தான் இலியானாவின் திரை வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
மும்பை: தனது திரை வாழ்க்கையையே ஒரு படம் மாற்றிவிட்டதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.
கோவாவை சேர்ந்த இலியானா, கடந்த 2006ம் ஆண்டு வெளியான தேவதாஸ் தெலுங்கு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டானது.
இதையடுத்து அவர் நடித்த போக்கிரி படமும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால், தெலுங்கு சினிமாவின் ராசியான நடிகையான மாறினார் இலியானா. அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கொட்டத்தொடங்கின.

தெலுங்கில் பிஸி
தெலுங்கில் பிஸியாக நடித்த வந்த அவர், ஒரு சில தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தார். ஆனால் அவர் நடித்ததில் பெரும்பான்மையானவை தெலுங்கு படங்கள் தான். தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்த அவர், பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்.

விதியின் விளையாட்டு
ஆனால் அவரது வாழ்வில் விதி ஜூனியர் என்.டி.ஆர் ரூபத்தில் வந்து விளையாடியது. அவருடன் இலியானா நடித்த படம் சக்தி. இந்த படம் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி தோல்வி அடைந்தது. இந்த படம் தான் இலியானாவின் திரைவாழ்க்கையை மாற்றியமைத்த படம்.

மோசமான படம்
'சக்தி' ஒரு மோசமான படம் என ஓப்பனாக பேட்டி கொடுத்தார் இலியானா. தன்னிடம் கூறிய கதை ஒன்று, ஆனால் எடுத்தது வேறு என்று வெளிப்படையாக பேசினார். மேலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.

குறைந்த பட வாய்ப்புகள்
இது ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களையும், தெலுங்கு திரையுலகினரையும் கோபப்பட வைத்தது. சக்தி படத்தை தொடர்ந்து இலியானாவுக்கு வாய்ப்புகள் குறையத்தொடங்கியது. இதையடுத்து அவர் மும்பைக்கு சென்று இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்தி படங்கள்
2013ம் ஆண்டு மும்பைக்கு போன அவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இந்தி படங்களில் நடித்து வந்தார். ஆனால் அங்கும் அவரால் பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்க முடியவில்லை. பின்னர் கடந்த ஆண்டு வெளியான அமர் அக்பர் ஆண்டனி படத்தில் தான் இலியானா தெலுங்கில் மீண்டும் நடித்தார்.

ஹிட்டாகவில்லை
இலியானா நடிப்பில் சமீபத்தில் இந்தியில் வெளியான படம் பாகல் பந்தி. இந்த படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. இதனால் செம அப்செட்டில் இருக்கிறாராம் இலியானா.

சல்மான் கான் படங்கள்
தான் பிஸியாக இருந்த சமயத்தில், சல்மான் கானின் இரண்டு பட வாய்ப்புகளை நிராகரித்ததாகவும், அது தான் வாழ்வில் தான் செய்த மிகப் பெரிய தவறு என்றும் இலியானா தெவித்துள்ளார். மேலும் சக்தி படம் ரிலீஸ் சமயத்தில் தனது செயல்பாடுகளும், வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக அவர் வருத்தப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











