எவன் பார்த்த வேலைடா இது? ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. எலான் மஸ்குக்கு வைத்த கோரிக்கை!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால், நேரடியாக எலான் மஸ்குக்கே கோரிக்கை வைத்துள்ளார்.

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன் போன்ற படங்கள் வெளியாகின.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் தமிழில் அதே பெயரில் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது. பெண்கள் சமைப்பதற்கு மட்டுமே படைக்கப்பட்டவர்கள் இல்லை என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லப்பட்டு இருக்கும். இந்த படத்தைத் தொடர்ந்து ரன் பேபி திரைப்படத்தில் நடித்திருந்தார். க்ரைம் திரில்லர் பாணியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு மக்களிடம் ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

ட்விட்டர் கணக்கு முடக்கம்

ட்விட்டர் கணக்கு முடக்கம்

தற்போது வித்தியாசமான கதைகளில் கவனம் செலுத்தி நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இன்ஸ்டாகிராம் , ட்விட்டர் போன்ற சமூக இணைய தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவரின் பி.ஆர்.ஓ யுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்றும், அதுவரை ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் அவரது கணக்கில் பதிவிடப்படுவதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எலான் மஸ்க்குக்கே ட்வீட்

எலான் மஸ்க்குக்கே ட்வீட்

மேலும்,பி.ஆர்.ஓ வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், எலான் மஸ்க்கைக் குறிப்பிட்டு, அன்புள்ள திரு எலான் மஸ்க், நான் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிக ரசிகர்களைக் கொண்ட தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்த சிக்கலைத் தீர்த்துவைத்து, என் ட்விட்டர் கணக்கை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

கைவசம் உள்ள படம்

கைவசம் உள்ள படம்

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது விஷ்ணு விஷாலுடன் மோகன் தாஸ் படத்திலும், தீயவர் குலைநடுங்க, இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம் ஆகிய தமிழ் படங்களிலும், Ajayante Randam Moshanam,Pulimada, Her Story என்ற மலையாளத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X