ஜன நாயகன் நாயகி பூஜா ஹெக்டே.. அடேங்கப்பா அவர் ஹேண்ட் பேக்கின் விலை இத்தனை லட்சமா?

சென்னை: முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தைத் தொடர்ந்து கோலிவுட்டிலிருந்து ஒதுங்கிய அவர் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிஸியானார். சூழல் இப்படி இருக்க பீஸ்ட் படத்தில் நடித்து தமிழுக்கு மீண்டும் வந்தார். கடைசியாக சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்த அவர் இப்போது விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார்.

மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் பூஜா ஹெக்டே. மாடலிங் துறையில் இருந்த அவர் 2012ஆம் ஆண்டு ஜீவாவை வைத்து மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். படத்துக்கு மிஷ்கின் ஏகப்பட்ட ஹைப்பை ஏற்றிவைத்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் பூஜா ஹெக்டேவுக்கும் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் கிடைக்காவிட்டாலும் தெலுங்கில் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் வந்தன.

பிஸியான பூஜா ஹெக்டே: தெலுங்கில் அவர் நடித்த முதல் படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. அதேசமயம் பூஜாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலில் ஹிந்தியிலும் அவர் தனது என்ட்ரியை கொடுத்தார். ஆனால் அந்தப் படமும் ஓரளவுதான் வரவேற்பை பெற்றதன் காரணமாக அங்கும் வாய்ப்புகள் இல்லை. தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். தமிழும், ஹிந்தியும் பூஜாவை கைவிட்டாலும் தெலுங்கு அவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அதனையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் தமிழில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஜோராக தொடங்கினார்.

ஹிந்தியில் படு பிஸி: இதற்கிடையே ராதேஷ்யாம் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியானது. அதனையடுத்து ஹிந்தியிலும் பிஸியாகியிருக்கிறார் பூஜா. அதன்படி அவர், ஹவுஸ்ஃபுல் 4, கிசி கா பாய் கிசி கி ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் அவரது நடிப்பில் தேவா என்ற படம் ஹிந்தியில் வெளியாகவிருக்கிறது. அது மட்டுமின்றி மேலும் சில ஹிந்தி படங்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வரலாம் என்று தெரிகிறது.

The handbag owned by Pooja Hegde is worth two lakh rupees
Photo Credit:

தமிழில் வளர்ச்சி: கோலிவுட்டில் பூஜா ஹெக்டேவின் இரண்டாவது இன்னிங்ஸ் செல்வ செழிப்பாகவே இருக்கிறது. பீஸ்ட் படத்துக்கு பிறகு சூர்யாவோடு ரெட்ரோ படத்தில் நடித்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தாலும்; அதில் இடம்பெற்ற கனிமா பாடலுக்கு பூஜா போட்ட ஆட்டம் பட்டித்தொட்டியெங்கும் ட்ரெண்டானது. பலரும் பூஜாவின் அந்த ஸ்டெப்பை ரீ க்ரியேட் செய்து ரீல்ஸாக போட்டு தள்ளினார்கள். இதனால் அவரது மீதான வெளிச்சம் அதிகமாகியது.

ஜன நாயகன்: ரெட்ரோ மட்டுமின்றி விஜய்யுடன் ஜன நாயகன் படத்திலும் நடித்திருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் அப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸானது. இதுதவிர்த்து ரஜினி நடித்திருக்கும் கூலி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். இப்படி கோலிவுட்டில் அவரது வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. மேலும் சில படங்களில் நடிக்க அவர் கமிட்டாகியிருக்கிறார்.கண்டிப்பாக தமிழில் பெரிய இடத்தை பிடிப்பார் என்று பலரும் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஹேண்ட் பேக்கின் விலை: இந்நிலையில் பூஜா ஹெக்டே தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது மும்பை ஏர்போர்ட்டுக்கு அவர் இன்று வந்தபோது அங்கிருந்த சக பயணிகள் அவரை வீடியோ எடுத்தார்கள். அப்போது அவர் அணிந்திருந்த ஹேண்ட் பேக்கின் விலை குறித்து தெரியவந்திருக்கிறது. அதனபடி அவர் வைத்திருக்கும் ஹேண்ட் பேக்கின் விலை இரண்டு லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்களோ 2 லட்சம் ரூபாய்க்கு ஹேண்ட் பேக்கா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X