என்னது நயன்தாரா பயன்படுத்தும் ஹேண்ட் பேக்கின் விலை இவ்வளவா?.. அடேங்கப்பா வேற லெவல்
சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக டெஸ்ட் திரைப்படம் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தப் படம் படுதோல்வியைத்தான் சந்தித்தது. அடுத்ததாக அவரின் நடிப்பில் மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்சிக் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. மேலும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் கமிட்டாகியிருந்தாலும் அவருக்கும் இயக்குநர் சுந்தர். சிக்கும் இடையே பிரச்னை என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் பிஸியாக நடித்துவருகிறார். அவரது நடிப்பு பயணத்துக்கு விக்னேஷ் சிவன் தனது முழு ஆதரவை கொடுத்துவருகிறார். இரண்டு பேருக்கும் நானும் ரௌடிதான் பட சமயத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி; சில வருடங்களுக்கு முன்பு திருமணத்தில் முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரண்டு மகன்களை பெற்றார்கள். வாடகை தாய் விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டதாக பேச்சுக்கள் எழுந்த சூழலில்; அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று விசாரணையில் உறுதியானது.

ஹிந்தியில் அறிமுகம்: இத்தனை வருடங்களாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டும் நடித்துவந்த அவர்; திருமணம் முடிந்தவுடன் ஹிந்தியில் அறிமுகமானார். ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியிருந்த ஜவான் படத்தில்தான் அவர் முதன்முறையாக ஹிந்தியில் நடித்தது குறிப்பிடத்தக்கது. நயன் நடித்த முதல் ஹிந்தி படமே மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நயனுக்கு மேற்கொண்டு வாய்ப்புகள் வரும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
தொடர் தோல்விகள்: கடந்த சில வருடங்களில் நயன் நடித்த படங்களில் ஜவான் மட்டுமே ஹிட்டாகியிருக்கிறது. அன்னபூரணி உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. கடைசியாக வெளியான டெஸ்ட் திரைப்படம்கூட தோல்விதான். மேலும் படத்தை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு அப்படத்தால் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்வரை நஷ்டம் என்றே கூறப்படுகிறது. எனவே கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நயன்.
அடுத்த படங்கள்: நயனின் கைவசம் இப்போதும் ஏராளமான படங்கள் இருக்கின்றன. அதன்படி மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்சிக் ஆகிய படங்களில் நடித்துவரும் அவர்; சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதேசமயம் அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் இரண்டு பேருக்குமிடையே மோதல் ஏற்பட்டதாகவும்; அநேகமாக படத்திலிருந்து இரண்டு பேரில் ஒருவர் விலகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
தோல்விகளோடு பிரச்னைகள்: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் நயனை சுற்றி பிரச்னைகளும், சர்ச்சைகளும் எழுவது அதிகமாகியிருக்கிறது. முதலில் தனுஷுடன் மோதிய அவர்; அடுத்ததாக மூன்று பத்திரிகையாளர்கள் பற்றி பேசியது சர்ச்சையை உருவாக்கியது. மேலும் மதுரையில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றதிலும் விமர்சனங்கள் எழுந்தன. இப்படி தொடர்ந்து அவரை சுற்றி பிரச்னைகள் எழுந்தாலும் தன்னுடைய பெர்சனல் வாழ்க்கையிலும், கரியரில் மட்டுமே அவரது கவனம் இருக்கிறது.
ஹேண்ட் பேக் விலை இவ்வளவா?: அந்தவகையில் தனது கணவர் மற்றும் குழந்தைகளோடு வெளிநாடுகளுக்கு செல்லும் அவர்; சமீபத்தில் ஐரோப்பாவுக்கு சென்றார். அப்போது எடுத்த புகைப்படங்கள் ட்ரெண்டான சூழலில்; இன்னொரு தகவல் வைரலாகியிருக்கிறது. அதாவது அந்த சுற்றுலாவின்போது நயன் பயன்படுத்திய ஹேண்ட் பேக் விலை பற்றிதான் இப்போது தெரியவந்திருக்கிறது. அதன்படி பிராடா என்ற பிராண்டை சேர்ந்த அந்த ஹேண்ட் பேக்கின் விலை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாயாம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ என்னது ஒரு ஹேண்ட் பேக்கின் விலை இரண்டு லட்சம் ரூபாயா என்று வாயை பிளந்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











