என்னது தமன்னாவின் Hand Bag விலை இத்தனை லட்சம் ரூபாயா?.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோது விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ்தான் அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது விஜய் அஜித் சூர்யா கார்த்தி ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் ஒரு காலத்தில் தமன்னாவின் அலை கோலிவுட்டில் பலமாகவே அடித்தது. பல வருடங்கள் அவர் கோலிவுட்டை ஆட்சி செய்வார் என பலரும் கணித்தனர். இடையில் என்ன நடந்ததோ அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
tamannaah vijay varma
தெலுங்கிலும் டல்: தமிழில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் தெலுங்கிலும் வெற்றி கொடியை பறக்க விட்டவர் தமன்னா. அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா துறையும் கைவிட்டாலும் அவருக்கு ஹிந்தி சினிமா கை கொடுத்தது அதன்படி அங்கு அவர் நடித்த படங்களும் வெப் சீரிஸ்களும் ஹிட் அடித்துள்ளன. அதேபோல் அங்கு அவர் தனது கிளாமரை கொஞ்சம் அதிகரித்திருக்க ஆரம்பித்திருக்கிறார்.
தமன்னாவின் காதல்: அதேபோல் லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். அதனை இரண்டு பேருமே உறுதி செய்திருக்கின்றனர். மேலும் இரண்டு பேரின் திருமணமும் விரைவில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். கடைசியாக அவர் நடித்த அரண்மனை 4 படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாகவே இருந்தது.
உச்சபட்ச கவர்ச்சி: இதற்கிடையே ஹிந்திக்கு சென்ற தமன்னா பாடல்களில் உச்சபட்ச கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில்கூட ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை சொக்க வைத்தார். அந்த நடனத்துக்காக அவர் ஒரு கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கினார் என்று ஒரு தகவல் ஓடியது கவனிக்கத்தக்கது. ஆனால் அதுகுறித்து தமன்னா எதுவும் வாயை திறக்கவில்லை.

மூன்று லட்சம் ரூபாய்: இந்நிலையில் தமன்னா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் யூஸ் செய்யும் Hand Bag பிராண்டடை சேர்ந்தது. அதன் விலை மட்டும் சுமார் மூன்று லட்சம் ரூபாய்வரை இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு கை பையின் விலை மூன்று லட்சமா? அப்படி அதில் என்ன ஸ்பெஷல் இருக்கும் என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X