ரஜினி, விஜய் வரிசையில் தண்ணீருக்கு போராடும் அதர்வா

By Mayura Akilan

கத்தி, லிங்கா வரிசையில் அதர்வா நடித்துள்ள சண்டிவீரன் படம் தண்ணீர் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த நடிகர் முரளியின் மகனும் தமிழ் திரையில் வளர்ந்து வரும் நடிகருமான அதர்வா நடிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘பரதேசி' படம் நடிகர் அதர்வாவிற்கு பெரும் வரவேற்பையும் பாராட்டையும் கொடுத்தது. ஆனால் அதற்கு அடுத்து திரைக்கு வந்த அவரது படங்கள் சொல்லும்படி வெற்றி பெறவில்லை.

சண்டிவீரன்

சண்டிவீரன்

இந்த நிலையில், நடிகர் அதர்வாவின் நடிப்பில் ‘சண்டிவீரன்' படத்தை இயக்கியுள்ள ‘களவாணி' சற்குணம் இப்படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் முனைப்புக் காட்டி வருகின்றார். அந்த படத்தை தயாரித்திருப்பது இயக்குநர் பாலா என்பதால், அப்படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

அதர்வா ஆர்வம்

அதர்வா ஆர்வம்

இரும்புக்குதிரை படத்தை அடுத்து அதர்வா நடித்து வரும் திரைப்படம் 'சண்டிவீரன். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து சில நாட்களுக்கு முன் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

தற்போது அதர்வா உள்பட படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் தங்கள் டப்பிங் பணியை முடித்து விட்டதாகவும், ஒருசில சிறிய கேரக்டர்களில் நடித்தவர்கள் மட்டுமே டப்பிங் செய்ய வேண்டியதுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தண்ணீர் பிரச்சினை

தண்ணீர் பிரச்சினை

விஜய்யின் கத்தி, ரஜினியின் லிங்கா படங்களை அடுத்து தண்ணீர் பிரச்சனையை வித்தியாசமான கோணத்தில் இயக்குனர் சற்குணம் இந்த படத்தில் கூறியுள்ளதாகவும், இந்த படம் அவருக்கு மட்டுமின்றி அதர்வாவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இசைவெளியீட்டு விழா

இசைவெளியீட்டு விழா

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கயல் ஆனந்தி

கயல் ஆனந்தி

அதர்வா ஜோடியா ‘கயல்' ஆனந்தி நடித்துள்ள இந்த படத்தை பாலாவின் 'பி ஸ்டுடியோ' நிறுவனம் தயாரித்து வருகிறது. ஸ்ரீ க்ரீன் புரடொக்ஷன் நிறுவனம் இந்த படத்தின் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சண்டிவீரன் திருப்புமுனை

சண்டிவீரன் திருப்புமுனை

நடிகர் அதர்வாவின் நடிப்பில் இறுதியாக திரைக்கு வந்த ‘இரும்புக்குதிரை' படத்தையடுத்து நடிகை ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து நடிகர் அதர்வா நடித்து வந்த ‘ஈட்டி' படம் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகாததால் திரைக்கு வர முடியாத சூழலில் உள்ளது. அதேபோல், ‘கணிதன்' படமும் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. ​ எனவே சண்டிவீரன் படம் சரியான திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X