இளமை இதோ, இதோ
வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்லை என்பது ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமல்ல இன்னும் சில நடிகைகளுக்கும் இந்த வார்த்தை பொருந்தும்.
ஒருகாலத்தில் வெள்ளித்திரையில் நாயகியாக கலக்கியவர்கள் இன்றைக்கு சின்னத்திரையில் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாது விளம்பரங்களிலும் நடித்து பணம் சம்பாதிக்கின்றனர்.
இளம் நடிகைகளை விடவும், விளம்பர மாடல்களை விடவும் அதிக அளவில் விளம்பரங்களில் தோன்றுவது முன்னாள் சினிமா கதாநாயகிகளும், இந்நாள் சீரியல் ஹீரோயின்களும்தான். சாம்பார் பொடி தொடங்கி குழந்தைகள் சாப்பிடும் நொறுக்குத்தீனி வரை அதை வாங்குங்க... இதை வாங்குங்க என்று நுகர்வோர்களை கவர்ந்து வருகின்றனர். அதிக அளவில் விளம்பரத்தில் கல்லா கட்டும் ஆன்டி நடிகைகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

ராதிகா
எண்பதுகளில் தமிழ்சினிமா ஹீரோயின்.... அம்மா, அக்கா, அண்ணி என நடித்த ராதிகா... சித்தியாக சன் டிவியில் சீரியலில் நுழைந்தார். இன்றோ சீரியலுடன் விளம்பர வாய்ப்பும் அதிக அளவில் வருகிறது. மசாலாப் பொடி விளம்பரம் தொடங்கி சத்துபானம் வரை நடிக்கிறார். சித்திக்கு இன்னமும் அதிக மவுசு இருக்கத்தான் செய்கிறது.

ரம்யா கிருஷ்ணன்
இவரும் எண்பதுகளில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் ஆனால் தமிழில் அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. படையப்பா திரைப்படம் மூலம் ரீ எண்ட்ரி ஆனார் தொடர்ந்து சீரியல் விளம்பரம் என செம கல்லா கட்டுகிறார். வயசானாலும் அழகும் இளமையும் அப்படியேதான் இருக்கிறது ரம்யாவிற்கு.

தேவயானி
அறிமுகப் படத்தில் கவர்ச்சி நடனம் ஆடினாலும் காதல்கோட்டை படம் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டவர். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் சீரியலில் நுழைந்தார். இப்போது நைட்டி விளம்பரம் தொடங்கி சோப்பு விளம்பரம் வரை தேவயானி ராஜ்ஜியம்தான்.

சிம்ரன்
இடுப்பழகி சிம்ரன் திருமணம் குழந்தைகள் என்று செட்டிலான பின்னர் சினிமா வாய்ப்புகள் இல்லை. கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ என்று சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். அதோடு விளம்பரத்திலும் வந்து செல்கிறார் சிம்ரன்.

ஜோதிகா
சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனபின்னர் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக நேரம் செலவழித்து வரும் ஜோதிகா கணவர் சூர்யா உடன் காபி விளம்பரத்தில் தலை காட்டினார். இப்போது தனியாக சோப்பு விளம்பரத்தில் நடித்து வருகிறார்.

அனுஹாசன்
இந்திரா படத்தில் ஹீரோயினாக நடித்த அனுஹாசன் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினார். வெளிநாட்டில் செட்டில் ஆனாலும் விளம்பரங்களில் அவ்வப்போது வந்து செல்கிறார்.

சரண்யா பொன்வண்ணன்
அழகான அம்மா என்று இன்றைக்கு தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் சரண்யா பொன்வண்ணன். பிஸியான அம்மாவாக இருந்தாலும் நகைக்கடை, துணிக்கடை விளம்பரங்களில் வந்து செல்கிறார்.

ஹேமமாலினி
எழுபதுகளில் தமிழ், இந்தி சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னி. இன்றைக்கும் அதே மாறாத அழகோடு நடனமாடுகிறார். பட்டு சேலை விளம்பரங்களில் நடிக்கிறார்.

ஸ்ரீதேவி
பதினாறு வயதினிலே மயிலு போலவே இன்றைக்கும் சிக் என்று இருக்கும் ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதோடு நகைக்கடை, துணிக்கடை என விதம் விதமான விளம்பரங்களில் வந்து செல்கிறார்.

கஜோல்
பாலிவுட் உலகின் முன்னாள் கனவுக் கன்னி கஜோல் கணவர் அஜய் தேவ்கானுடன் விளம்பரங்களில் தோன்றினார். தற்போது மீண்டும் சினிமா, விளம்பரம் என்று இன்றைக்கும் இளமை மாறாமல் நடித்து வருகிறார் கஜோல்

மாதுரிதீட்ஷித்
தொண்ணூறுகளில் பாலிவுட் பட உலகை கலக்கிய மாதுரி திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் சின்னத்திரை நடுவர், விளம்பரம், சினிமாவில் குத்துப்பாடல் என்று அதே அழகோடு களம் இறங்கியுள்ளார்.

கரீஷ்மா கபூர்
கரீஷ்மாவின் இளமையும் அழகும் கொஞ்சம் கூட குறையவே இல்லை என்று அவர் நடித்து வரும் விளம்பரங்களைப் பார்த்தாலே தெரியுமோ.

ஜூகி சாவ்லா
முன்னாள் இந்திய அழகி இவர். பாலிவுட் உலகில் கொடி கட்டிப் பறந்தவர். தற்போது சின்னத்திரையில் விளம்பரத்தில் நடித்து வருகிறார்.

ரேகா
பாலிவுட் கனவுக்கன்னி ரேகா, தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார் எனினும் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை. அழகும் இளமையும் கொஞ்சம் கூட குறையவில்லை என்கின்றனர் இவரது ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











