நல்லவேளை கையை வச்சு மறச்சீங்க.. கிம் கர்தாஷியனின் போல்ட் போட்டோஸ்.. ரசிகர்கள் ஷாக்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகைகள் கொஞ்ச காலம் டாப்லெஸ் போஸ் எல்லாம் கொடுக்காமல் வலம் வந்த நிலையில், மீண்டும் கிளாமரை தாண்டிய குளத்தில் தொப்பென குதிக்க ஆரம்பித்து விட்டனர். கோலிவுட்டிலேயே நடிகைகள் பிகினி உடைகளில் வலம் வரும் நிலையில், நம்முடைய ரேஞ்சுக்கு நாம் அதை விட டபுள் மடங்கு உச்சகட்ட கவர்ச்சிக்கும் எல்லை மீறிய ஆபாசத்துக்கும் செல்ல வேண்டும் என்கிற நோக்குத்துடன் வலம் வருகின்றனர்.

சமீபத்தில் சிட்னி ஸ்வீனி அணிந்து வந்த உடை மற்றும் அதற்கு முன்னதாக கன்யே வெஸ்ட்டின் புது பொண்டாட்டி அணிந்து வந்த டிரான்ஸ்பரன்ட் நிர்வாண உடைகளால் கடுப்பான கிம் கர்தாஷியன் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக மாறி கொடுத்த போஸ் இணையத்தை சூடாக்கியுள்ளது.

The Mother of 4 Kim Kardashian s latest bold photoshoot gets trolled from fans
Photo Credit:

ஆசியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த திருமணங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பிரம்மாண்ட நிகழ்வில் பங்கேற்ற பிரபலங்களில், அமெரிக்காவின் தொலைக்காட்சி நட்சத்திரமான கிம் கர்தாஷியன் பலரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் ஒன் சைடு டாப்லெஸ் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார்.

14 ஆயிரம் கோடி சொத்து: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் ஆடம்பர திருமணத்தில் கலந்துகொண்ட கிம், விநாயகர் சிலை அருகே எடுத்த படம் உட்பட பல படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஒரு ரியாலிட்டி டிவி நட்சத்திரமாக மட்டுமல்லாமல், கிம் கர்தாஷியன் ஒரு ஃபேஷன் ஐகானாகவும் வலம் வருகிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.14,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெண் தொழிலதிபர்: நடிப்பு, மாடலிங் மற்றும் பல்வேறு வணிக முயற்சிகள் மூலம் கிம் ஆண்டுக்கு சுமார் ரூ.900 கோடி வருமானம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது. கலிஃபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் அவருக்குச் சொந்தமாக சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான ஆடம்பர மாளிகை உள்ளது. 2022-ல் வாங்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான வீடு 4,239 சதுர அடி பரப்பளவு கொண்டது.

இந்த ஆடம்பர மாளிகை நேர்த்தியான வெள்ளை நிற வடிவமைப்பில் நான்கு படுக்கையறைகள், ஐந்து குளியலறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு தியேட்டர், பெரிய நீச்சல் குளம் மற்றும் கூடைப்பந்து மைதானம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.

பிரைவேட் ஜெட்: ஆடம்பர வீட்டைத் தவிர, கிம் ஒரு தனிப்பட்ட ஜெட் விமானத்தையும் வைத்துள்ளார். 2022-ல் ரூ.1,255 கோடி மதிப்புள்ள Gulfstream ஜெட் விமானத்தை வாங்கினார். அதற்கு 'கிம் ஏர்' என பெயரிட்டுள்ள அவர், அந்த விமானத்தில் கிங் சைஸ் படுக்கை, இரண்டு குளியலறைகள் மற்றும் காஷ்மீர் லெதர் இருக்கைகள் உள்ளன.

இந்த ஜெட் விமானத்தில் ஒரே நேரத்தில் 16 பயணிகள் வரை பயணிக்கலாம். கிம் பல ஆடம்பர கடிகாரங்களையும் சேகரித்து வைத்துள்ளார். இதில், ரூ.1 கோடி மதிப்புள்ள Audemars Piguet Royal Oak மற்றும் ரூ.61 லட்சம் மதிப்பிலான Aujacob & Co Casio G-Shock கடிகாரங்களும் அடங்கும்.

3 கணவர்கள், 4 குழந்தைகள்: டேமன் தாமஸ், க்ரிஷ் ஹம்ப்ரஸ் மற்றும் கன்யே வெஸ்ட் என 3 பேரை திருமணம் செய்து விவாகரத்தும் செய்துவிட்டார் கிம் கர்தாஷியன். அவருக்கு நார்த் மற்றும் சிக்காகோ என இரு மகள்களும், செயின்ட் மற்றும் ஸாம் என இரு மகன்கள் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர். 45 வயதான நடிகை கிம் கர்தாஷியன் இந்த வயதிலும் கவர்ச்சியின் உச்சமாக திகழ்கிறார்.

நல்லவேளை கைகளை வைத்து மறைத்துவிட்டார்: மேலாடை அணியாமல் இன்ஸ்டாகிராமில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட கிம் கர்தாஷியன் நல்லவேளையாக தனது கைகளை வைத்து முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில், முழு நிர்வாணமாக எல்லாம் எதையும் வைத்து மறைக்காமல் போஸ் கொடுத்து பிரபலமானவர் தான் இவர். 4 குழந்தைகளுக்கு அம்மாவான பின்னரும், பல கோடி பிசினஸ் செய்து வரும் நிலையிலும், இப்படி ஆபாச கவர்ச்சியை காட்டி வருகிறாரே என பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X