நீ நிம்மதியா இருக்க முடியாது.. நள்ளிரவில் ஆபாசமாக பேசி நடிகை ஜெயலட்சுமியை மிரட்டிய மர்ம நபர்!
சென்னை: சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஜெயலட்சுமி. இவர், மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், தொலைபேசியில் மர்ம நபர் ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறியுள்ளார்.
அண்ணாநகர் மேற்கு வெல்கம் காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரபல நடிகை ஜெயலட்சுமி. இவர் தற்போது பாஜகவில் மகளிர் அணியில் மாநிலத் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர், தொலைபேசி மூலம் மிரட்டியவர்கள் குறித்து ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர்.

நள்ளிரவில் மிரட்டல்: எனக்கு நள்ளிரவில் இரண்டு போன் வந்தது, அதில் ஒரு போனில் பேசியது சின்ன பையன், அவன் பேசியதை வைத்து கண்டுபிடித்தேன். அவன் ஒரு பெண்ணுக்கிட்ட எப்படி பேசக்கூடாதோ அப்படி ஆபாசமாக பேசினான். நேரடியாக போன் நம்பரில் இருந்து பேசக்கூடிய அளவிற்கு உனக்கு தைரியம் இருக்கா, இந்த நம்பரை கண்டுபிடிக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டேன். அதற்கு அவன், முடிஞ்சா கட்டுபுடிங்க, காவல்துறையால் என்னை கண்டுபிடிக்கவே முடியாது என்றார்.
நீ நிம்மதியா இருக்க முடியாது: மேலும், நீ பாஜகவுல இருக்குற, உன்னைய நாங்க நோட் பண்ணி வெச்சிருக்கோம்.. இனிமே நீ நிம்மதியா இருக்க முடியாது என்று சொல்லி தலைவர்கள் பற்றி தரக்குறைவாக பேசியதால் , நான் போனை துண்டித்துவிட்டு ஆன் லைன் புகார் கொடுத்தேன். நான் புகார் கொடுத்த பிறகும் எனக்கு மீண்டும் போன் வந்தது. அந்த அழைப்பில், அந்த நபர் மிகவும் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தினார். இதுகுறித்து திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், மிரட்டி மர்ம நபரின் தொலைபேசி எண் 70 7 7 26 1 4 6 4 என்ற செல்போனில் இருந்து தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், எதிர் முனையில் பேசிய அடையாளம் தெரியாத நபர் தன்னை தரக்குறைவாக பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதனால், தான் மனஉளைச்சலுக்கு ஆளானதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











