கடவுளிடம் அதை மட்டுமே வேண்டுகிறேன்.. பிறந்த நாள் அதுவுமா ஃபீல் பண்ணும் பாலிவுட் கவர்ச்சி நடிகை!

மும்பை: பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ஜரின் கான் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Recommended Video

Bigg Boss Kavin Special B'Day Wishes to Amirtha Aiyer | Lift

சல்மான் கான் நடிப்பில் வரலாற்று படமாக வெளியான வீர் படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஹேட் ஸ்டோரி 3, ஹவுஸ்ஃபுல் 2, ரெடி, 1921, அக்சார், தாக்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டை தாண்டி பஞ்சாபி மொழியில் ஜாத் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் தாக்கா படங்களிலும் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா

தென்னிந்திய சினிமா

வட இந்தியாவில் இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் ஓவர் கவர்ச்சி காட்டி பல படங்களில் நடித்து வந்த நடிகை ஜரின் கான், டோலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான நடிகர் கோபி சந்தின் சாணக்யா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நம்ம எதிர்வீட்டு ஹீரோயின் மெஹ்ரின் பிர்சடா அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹேப்பி பர்த்டே

ஹேப்பி பர்த்டே

1987ம் ஆண்டு மே 14ம் தேதி மும்பையில் பிறந்த நடிகை ஜரின் கானுக்கு இன்றுடன் 33வயதாகிறது. பாலிவுட் ரசிகர்கள் ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும் நடிகை ஜரின் கானை வாழ்த்தி வருகின்றனர்.

பர்த்டே பிளான்

பர்த்டே பிளான்

கடந்த மே 9ம் தேதி தனது அம்மாவின் பிறந்தநாள் வந்ததை ரிவீல் செய்துள்ள நடிகை ஜரின் கான், தன்னுடைய அம்மா பிறந்தநாளையும், தனது பிறந்தநாளையும் அமெரிக்காவில் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், எல்லாத்தையும் இந்த கொரோனா டோட்டலாக காலி செய்து விட்டதாக ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

கடவுளிடம் வேண்டுகோள்

கடவுளிடம் வேண்டுகோள்

மேலும், தனது பிறந்த நாள் பரிசாக கடவுளிடம் தான் வேண்டிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான், சீக்கிரமே இந்த கொரோனா வைரஸ் நம்ம உலகத்தை விட்டே போயிடணும், திரும்பி வரவே கூடாது எனக் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதயத்திலிருந்து

இதயத்திலிருந்து

ரசிகர்களுக்கு பிறந்தநாள் அதுவுமா என்ன சொல்ல விரும்புறீங்க என்ற கேள்விக்கு, தனது இதயத்திலிருந்து அனைவருக்கும் நன்றியை கூற கடமைப் பட்டு இருக்கிறேன். அவர்கள் இல்லை என்றால் எந்த ஒரு நடிகரும் நட்சத்திரமாக திரையில் ஜொலிக்க மாட்டார்கள். லாக்டவுன் முடிஞ்சு சீக்கிரமே ஷூட்டிங் எல்லாம் ஆரம்பிக்கணும் என சிரித்தபடியே தனது பேட்டியை முடித்துள்ளார் ஜரின் கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X