“ஹாப்பி பர்த்டே வீட்டுக்கார்“ முத்தத்தை பரிசளித்த பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை : தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை விஜயலட்சுமி தனது கணவரின் பிறந்த நாளுக்கு அன்பு முத்தத்தை கொடுத்து அந்த புகைப்படத்தை இப்போது சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை 28, அஞ்சாதே, வெண்ணிலா வீடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை விஜயலட்சுமி.

இயக்குனர் பெரோஸ் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு இவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், நேற்று பெரோஸ் தனது பிறந்த நாளை கொண்டாடியதையொட்டி அவருக்கு காதல் ததும்ப அன்பு முத்தத்தை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியவாறு புகைப்படம் ஒன்று இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபலமான நடிகையாக

பிரபலமான நடிகையாக

நடிகர் அஜித் குமார் நடித்த "காதல் கோட்டை" என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமி தமிழில் அஞ்சாதே, வெண்ணிலா வீடு, சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

காதலித்து திருமணம்

காதலித்து திருமணம்

துடிதுடிப்பான பேச்சு, கவர்ச்சி காட்டாத நடிப்பு அனைவரும் விரும்பும் குணம் என பலராலும் விரும்பப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜயலட்சுமி , பண்டிகை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பெரோஸ் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக

சிறப்பு விருந்தினராக

இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை இருக்கின்ற நிலையில் விஜயலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆகினர்.

திரைப்பிரபலங்கள் வாழ்த்து

திரைப்பிரபலங்கள் வாழ்த்து

இந்நிலையில் நேற்று தனது கணவரும் இயக்குனருமான பெரோஸ் தனது பிறந்தநாளை கொண்டாடியதையொட்டி பல திரைப்பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர்.

அழுத்தமாக முத்தத்தை

அழுத்தமாக முத்தத்தை

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி தனது கணவரின் பிறந்த நாளை வீட்டில் மிக எளிமையான முறையில் கொண்டாடியவாறு காதல் பொங்க அன்பு முத்தத்தை கன்னத்தில் அழுத்தமாக கொடுத்து "ஹாப்பி பர்த்டே வீட்டுக்கார்"என தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை இந்த அழகான புகைப்படத்தை பதிவிட்டு கூறியவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இந்த புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X