பிரியங்கா மோகனின் படுக்கையறை காட்சி மிஸ்ஸிங்..ரூ 3.5 கோடி முதலீடு போச்சு.. தவிக்கும் தயாரிப்பாளர்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா மோகனை வைத்து தயாரித்த டிக் டாக் படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் காணாமல் போனது என்றும், இதனால், படம் ஓடாமல் போய் தனக்கு, 3.50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் மதன குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த பிரியங்கா மோகன் தெலுங்கில் நானி ஹீரோவாக நடித்த கேங்லீடர் படத்தில் நடித்தார். அதன்பின் தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்தப்படம், தமிழ் சினிமாவில் இவருக்கு என்று தனி இடத்தை கொடுத்தது.

இதையடுத்து, சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். அதன் பின், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்து பெயர் எடுத்த இவர், தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.
தயாரிப்பாளர் புகார்: இந்நிலையில், பிரியாங்கா மோகன் நடித்த டிக்டாக் படத்தின் சில காட்சிகள் காணவில்லை என்று செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர், தற்போது அதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், நடிகை பிரியா மோகனை வைத்து டிக்டாக் என்ற படத்தை ரூ.3.50 கோடி செலவில் தயாரித்ததாகவும், அதன் பின்னர் தான் அவர் மற்ற டாக்டர், டான் படங்களில் நடித்து பிரபலம் ஆனார். தான் தயாரித்த படம் சில பிரச்சனைகளால் தாமதமானதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டிஎஸ்.ஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் படத்தை வெளியிட்டேன்.

முக்கியமான காட்சி இல்லை: இந்த படத்தைப் பார்த்து மிகவும் அதிர்ந்து போனேன், அதில் பிரியங்கா மோகன் நடித்திருந்த முக்கியமான 20 நிமிட காட்சி வரவே இல்லை. எனக்கு தெரியாமலே அந்த காட்சியை திட்டமிட்டு நீக்கி இருக்கிறார்கள். இதனால், தியேட்டரில் வெளியான டிக்டாக் படம் ஓடவே இல்லை. இதனால், எனக்கு ரூ.3.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், டிஎஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்தின் மாஸ்டரிங் என்ஜினியிர் தினேஷ் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் தயாரிப்பாளர் மதன குமார் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன படுக்கை அறை காட்சி: காணாமல் போன அந்த 20 நிமிட காட்சி என்ன என்று போலீசார் விசாரித்ததில், அவை படுக்கை அறை காட்சி என்றும், மிக நெருக்கமான காதல் காட்சி என்பது தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் பிரியங்கா மோகனுக்கு படவாய்ப்பு கிடைக்காததால், டிக்டாக் படத்தில், வரம்பு மீறி படு கவர்ச்சியாக படுமோசமாக நடித்துள்ளார். ஆனால், தற்போது, இவர் கவர்ச்சி காட்டாத நடிகையாக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்து இருப்பதால், இந்த இமேஜ் பாதிக்கப்படும் என்பதால், பிரியங்கா தரப்பினர் டிக்டாக் பட வெளியீட்டு நிறுவனத்திடம் பேசி அந்த காட்சிகளை நீக்கி இருக்கலாம் என தயாரிப்பாளருக்கு சந்தேகம் இருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











