ஒரு 'சிட்டி'யில் எத்தனை அழகிகளோ!
கின்னஸ் சாதனைக்காக தயாராகும் 'சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்' பாலிவுட் படத்தில் கவர்ச்சிக்கன்னிகளின் எண்ணிக்கையே ஒரு சாதனையாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் வீணா மாலிக்தான் முதலில் கவர்ச்சி நாயாகியாக புகுந்தார். அவரைத் தொடர்ந்து பைரவி கோஷ்வாமி என தொடர்ச்சியாக 4க்கும் மேற்பட்ட அழகிகள் இதில் நடிக்கின்றனராம்.
சதீஷ் ரெட்டி தயாரிப்பில், ஹாரூன் ரஷீத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் வகையில் இங்கிலாந்து, பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டுத்தயாரிப்பில் தயாராகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர்.
பாலிவுட் படங்களில் மூன்று கதாநாயகிகள், பல கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சாதாரணமாகிவிட்ட நிலையில் ஒரே படத்தில் சராமாரியாக கவர்ச்சி நாயகிகளை உலா வர விட்டிருக்கின்றனர். படத்தில் கவர்ச்சி நாயகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்ப படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளதாம். அதேசமயம் 2 மணி நேரம் ஓடப் போகும் படத்தில் இன்னும் எத்தனை அழகிகளை சேர்க்கப் போகிறாரா சதீஷ் ரெட்டி என்றும் பாலிவுட்டினர் குழம்பிப் போய் நிற்கின்றனர்.

முதலில் வீணா மாலிக்
முதலில் இப்படத்தில் வீணா மாலிக் ஹீரோயினாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அவர் படத்தில் எக்கச்சக்கமான கவர்ச்சியையும், ஏராளமான முத்தங்களையும் கொடுத்து கவர்ச்சி விருந்தளிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

அடுத்து வந்தார் தேவ்ஷி கந்தூரி
அடுத்து கவர்ச்சி கதகளியாக காட்சியளிக்கும் தேவ்ஷி கந்தூரியும் படத்தில் இடம் பெறப் போவதாகவும், இவருக்கும் கவர்ச்சி தான் பிரதான வேலையாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளயாகின. கந்தூரியின் ஸ்டில்களும் படு காரமாகவே இருந்தன.

லேட்டஸ்டாக வந்த பைரவி கோஸ்வாமி
இந்த நிலையில் மார்புக் கவர்ச்சிக்குப் பெய்ர போன பைரவி கோஸ்வாமியும் படத்தில் குஜால் அஜாலாக நடிக்கப் போவதாக நேற்றுதான் போட்டோக்களை அனுப்பி நியூஸையும் வெளியிட்டிருந்தனர். இந்தநிலையில் இன்னொரு அழகி குறித்த தகவலை பி.ஆர்.ஓ மூலம் அனுப்பி வைத்துள்ளார் சதீஷ் ரெட்டி.

பஞ்சாபிலிருந்து ஒரு அழகு 'கேக்'
பஞ்சாபிலிருந்து வந்துள்ள இந்த அழகு கேக்கின் பெயர் ஜோனிடா தோடா.ப்ரீத்தி ஜிந்தா, கரீனா கபூர், மஹி கில், ஜூஹி சாவ்லா வரிசையில் இவரும் பஞ்சாபிலிருந்து வந்த அழகுப் பெண்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு
பாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பது குறித்து ரொம்ப புளகாங்கிதமாக இருக்கிறார் ஜோனிதா. ரொம்ப ஆச்சரியமா சந்தோஷமா இருக்கு. பதட்டமாவும் இருக்கு. இந்தப் படம் கின்னஸ் சாதனை படைக்கப் போகிறதாமே...அதனால் எனக்கும் குஷியா, இருக்கு என்றார் ஜோனிதா.

பஞ்சாபியில் பிரபலமாம்
ஜோனிதா பாலிவுட்டுக்குத்தான் புதுசாம்... ஆனால் பஞ்சாபியில் ரொம்பப் பழசாம். அங்கு சக் ஜவானா, யாரா ஓ தில்தாரா என சில படங்களில் நடித்து ஹிட்டாகிப் போனவராம்.
இன்னும் எத்தனை ப்யூட்டிகளை சிட்டியில் சேர்க்கப் போகிறாரா ரெட்டி!


Click it and Unblock the Notifications











