ஏம்மா ப்ரியங்கா சோப்ரா, இதற்கெல்லாமா ஒரு படத்தில் இருந்து விலகுவது?

By Siva

Recommended Video

ரூ. 13 கோடி கொடுத்தும் சல்மான் கான் படத்தில் இருந்து விலகிய ப்ரியங்கா- வீடியோ

மும்பை: ப்ரியங்கா சோப்ரா சல்மான் கானின் படத்தில் இருந்து விலக போஸ்டர் பிரச்சனை காரணம் என்று கூறப்படுகிறது.

ஹாலிவுட்டில் கிட்டத்தட்ட செட்டிலான ப்ரியங்கா சோப்ரா மீண்டும் பாலிவுட் வரத் துடித்தார். பெரிய பட்ஜெட் படம் மூலம் பாலிவுட்டுக்கு திரும்ப நினைத்த அவர் சல்மான் கானின் பாரத் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

The real reson for Priyanka Chopras walk out from Bharat

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கி வரும் பாரத் படத்தின் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் ப்ரியங்கா.

இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு ப்ரியங்கா படத்தில் இருந்து விலகியுள்ளார். ப்ரியங்காவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதால் படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்பட்டது. ப்ரியங்காவின் செயல் சல்மான் கானை கோபம் அடைய வைத்துள்ளது. இது எல்லாம் ஒரு காரணம் என்று கூறி படத்தில் இருந்து விலகுவதா என்று தயாரிப்பு தரப்பும் கடுப்பாகியுள்ளது.

சல்மான் கான் படத்தில் இருந்து விலகிய கையோடு ஃபர்ஹான் அக்தரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ப்ரியங்கா சோப்ரா. பாரத் படத்தின் போஸ்டரில் திஷா பதானியுடன் சேர்ந்து போஸ் கொடுக்க மாட்டேன், எனக்கு சோலோ போஸ்டர் தான் வேண்டும் என்று அடம்பிடித்தாராம் ப்ரியங்கா. சோலோ போஸ்டருக்காகவே அவர் படத்தில் இருந்து விலகியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பாஜிராவ் மஸ்தானி உள்பட அனைத்து படங்களிலும் ப்ரியங்கா பிற நடிகைகளுடன் சேர்ந்து போஸ்டருக்கு போஸ் கொடுத்திருக்கிறார். தற்போது தான் ஹாலிவுட் ஸ்டாராகிவிட்டதால் அந்த கெத்தில் சோலோ போஸ்டர் கேட்கிறார் என்று கூறப்படுகிறது. ப்ரியங்காவின் நடவடிக்கை பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.

முன்னதாக சல்மானின் லண்டன் ட்ரீமஸ், மெய்ன் அவ்ர் மிசஸ் கன்னா ஆகிய படங்களில் நடிக்க மறுத்தார் ப்ரியங்கா சோப்ரா. சல்மானின் தம்பி சொஹைல் கான் தயாரித்த படத்தில் நடிக்க மறுத்து அவரின் கோபத்திற்கு ஆளானார். நடப்பதை எல்லாம் பார்த்தால் இனி சல்மான் குடும்பத்தார் யாரும் ப்ரியங்காவுடன் பேச மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ப்ரியங்கா சல்மான் கான் குடும்பத்தாருடன் நெருக்கமாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X