Trisha - மிஸ் யூஸ் செய்வாங்க வேண்டாம்.. அரசியல்வாதியை அலறவிட்ட திரிஷா.. மனம் திறந்த இயக்குநர்

சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்தார் திரிஷா. தொடர்ந்து இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 40 வயதாகும் திரிஷாவுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் தலை காட்டிய த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான லியோ படம்வரை என மொத்தம் 22 வருடங்கள் ஃபீல்டில் இருக்கிறார். ஒரு நடிகை சில வருடங்கள் தாக்குப்பிடிப்பதே அதிசயம் என்ற சூழலில் 22 வருடங்கள் ஹீரோயினாக இருப்பது பெரும் ஆச்சரியமே.

The Road Movie Director Arun Vaseegaran Talks about Trisha Controversy

பெரும் போராட்டம்: த்ரிஷாவை பொறுத்தவரை தன்னுடைய கரியரில் பல போராட்டங்களை சந்தித்தவர். அவர் பீக்கில் இருந்தபோது அவர் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் அதையெல்லாம் கண்டு அசராத அவர் தனது திறமையால் இன்னமும் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

மன்சூர் அலிகான்: சமீபத்தில்கூட லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசினார். அந்த விவகாரம் கடந்த சில நாட்களாகவே ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கும் த்ரிஷா தன்னுடைய காட்டமான பதிலடியை நேரடியாகவே சொன்னார். அதுமட்டுமின்றி அவருக்கு பக்கபலமாக ஒட்டுமொத்த திரையுலகமும் திரள ஆரம்பித்திருக்கிறது.

அடுத்தடுத்த படங்கள்: இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த த்ரிஷாவுக்கு 96 படம் கம்பேக்காக அமைந்தது. அந்தப் படத்துக்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து லியோ படத்தில் நடித்திருந்த அவர் தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இவை தவிர்த்து தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடிக்கவிருக்கும் அவர் ஹிந்தியிலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

அவதூறு: சூழல் இப்படி இருக்க சேலம் மாவட்ட அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஒருவர் திரிஷா மீது அவதூறை கிளப்பினார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்றுக்கொடுத்தது. மேலும் அவருக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என்று திரிஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். திரிஷாவுக்கு ஆதரவாக விஷால், சேரன் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இயக்குநர் பேட்டி: இந்நிலையில் தி ரோடு படத்தின் இயக்குநர் அருண் வசீகரன் திர்ஷா குறித்து பேசுகையில், "மதுரையில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தோம். அப்போது லோக்கல் கவுன்சிலர் ஒருவர் தனது கூட்டத்துடன் வந்து திரிஷாவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். திரிஷா அவரை கண்டுகொள்ளவே இல்லை. நான் சென்று மேடம் அவர்கள் வெயிட் செய்கிறார்கள் என்று கூறினேன். அதற்கு அவரோ அரசியல்வாதியோடு புகைப்படம் எடுத்தால் அதை அவர்கள் மிஸ் யூஸ் செய்துவிடுவார்கள் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டார். அப்படிப்பட்டவரா அதிமுக முன்னாள் நிர்வாகி கூறியது போல் நடந்திருப்பார். அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Read more about: trisha திரிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X