கர்ப்பமாக இருக்கிறாரா சோபிதா துலிபாலா?.. உண்மை என்ன?.. இதோ முழு விவரம்
ஹைதராபாத்: சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை பிரிந்த நாக சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்திருக்கிறார். இருவரது திருமணமும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், குடும்பத்தினர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இந்தச் சூழலில் சோபிதா துலிபாலா கர்ப்பமாக இருக்கிறார் என்று சில நாட்களாக தகவல்கள் பரவிவந்தது குறிப்பிடத்தக்கது.
நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா கடைசியாக தூதா என்ற வெப் சிரீஸில் நடித்தார். அதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. இப்போது அவர் தண்டெல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் தனக்கு ஹிட்டாக அமையும் என்ற நம்பிக்கை சைதன்யாவுக்கு இருக்கிறது.

சமந்தாவுடன் நாக சைதன்யா பிரிவு: இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த சமந்தாவை காதலித்தார் சைதன்யா. இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து அவர்களது திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். சில வருடங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த அவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டு விவாகரத்தும் பெற்றுக்கொண்டார்கள்.
சோபிதாவுடன் சைதன்யா காதல்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பிலிருந்து சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவந்தார். அவர்கள் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகின. ஆனால் இரண்டு பேருமே தங்களது காதலை பொதுப்படையாக அறிவிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பிரமாண்ட திருமணம்: அதனையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் கடந்த வருடம் அவர்களுக்கு திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தனது நாகேஸ்வர ராவின் சிலைக்கு முன்பு சோபிதாவுக்கு தாலி கட்டினார் அவர். இந்தத் திருமண வாழ்க்கையிலாவது நாக சைதன்யா நிலைத்திருக்க வேண்டும் என்று சமந்தாவின் ரசிகர்களும், அவரது ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
கர்ப்பமாக இருக்கிறாரா?: திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதில் சோபிதா துலிபாலா கவனம் செலுத்திவருகிறார். அவரது நடிப்பு பயணத்துக்கு நாக சைதன்யா, நாகார்ஜுனா உள்ளிட்டோரும் முழு ஆதரவை கொடுத்துவருகிறார்கள் என்றே தெரிகிறது. இரண்டு பேரின் வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் சோபிதா துலிபாலா கர்ப்பமாக இருக்கிறார்; அதனை வெளியில் சொல்லாமல் வைத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் பரவின.
உண்மை என்ன?: இந்நிலையில் அதுகுறித்து உண்மை தெரியவந்திருக்கிறது. அதன்படி சைதன்யா - சோபிதா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் இதுகுறித்து கூறுகையில், "சோபிதா துலிபாலா கர்ப்பமாக இல்லை. அவர் Anti - fit வகையை சேர்ந்த உடையை சமீபத்தில் அணிவதை அதிகரித்திருக்கிறார். அதனால்தான் அவர் கர்ப்பமாக இருப்பதுபோன்ற தோற்றம் வந்துவிட்டது" என்று கூறிவிட்டதாக தெலுங்கு மீடியாக்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











