அமலா பாலிடமிருந்து அதை திருடிய கணவர்.. எப்படியெல்லாம் பண்ணிருக்காரு பாருங்க

சென்னை: அமலா பால் தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதனையடுத்து அவர் இரண்டவது திருமணம் செய்துகொண்டார். இப்போது கர்ப்பமாகவும் இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சாமி இயக்கிய சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். முதல் படம் தோல்வியடைந்தாலும் அந்தப் படத்தின் கதைக்களமும், அமலா பால் ஏற்றிருந்த கதாபாத்திரமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இதன் காரணமாக அமலா பால் பலரது கவனத்துக்கு உள்ளானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி நடித்த மைனா படம் ஹிட்டாக முன்னணி ஹீரோயின் என்ற இடத்துக்கு நகர்ந்தார்.

The video shared by Amala Paul is trending on social media

தலைவா: மைனா படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு சில படங்கள் கிடைத்தாலும் முக்கியமான படம் தலைவா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த அந்தப் படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. படம் தோல்வியடைந்தாலும் விஜய்யுடன் நடித்த நடிகை என்ற பெயர் கிடைத்ததால் அமலா பாலுக்கு மேலும் பட வாய்ப்புகள் அமைந்தன.

ஏ.எல்.விஜய்யுடன் திருமணம்: தலைவா படத்தில் நடித்தபோது அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்தனர். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஏ.எல்.விஜய் அமலா பாலை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து செய்தனர். அவர்களது விவாகரத்துக்கு காரணமாக பல யூகங்கள் கூறப்பட்டன. ஆனால் அதுகுறித்து இருவரும் அமைதி காக்க ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

அமலா பாலின் கரியர்: விவாகரத்துக்கு பிறகு அமலா பால் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்தில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பாக பேசவைத்தார் அமலா பால். தொடர்ந்து கடாவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கிடையே அமலா பால் பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலிப்பதாகவும் இருவருக்கும் திருமணமே நடந்துவிட்டதாகவும் தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. ஆனால் அமலா பால் அமைதியாகவே இருந்தார்.

இரண்டாவது திருமணம்: இந்தச் சூழலில் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் அமலா பால். அவர் இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். சினிமாவை பொறுத்தவரை பிருத்விராஜுடன் ஆடுஜீவிதம் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் அமலா பால் தொடர்ந்து நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரெண்டாகும் வீடியோ: இதற்கிடையே அமலா பால் தனது கணவருடன் செய்யும் சுட்டித்தனங்களை வீடியோவாக பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார் அவர். அதாவது, அவரும், அவரது கணவரும் ஒரு ஹோட்டலுக்கு செல்கின்றனர். அப்போது அமலா பால் தான் குடிப்பதற்காக வைத்திருந்த ஜூஸை தேசாய் எடுத்து குடித்துவிடுகிறார். அதற்கு அமலா பால், முன்பெல்லாம் ஹோட்டலுக்கு சென்றால் இதுபோன்று எனது உணவை திருடி எனது தம்பி சாப்பிடுவான். இப்போது அந்த வேலையை எனது கணவர் செய்கிறார். இப்படி உங்கள் உணவை திருடி சாப்பிடுவது யார் என்று கேப்ஷனோடு கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X