ரம்பா வீட்டில் சோகம்.. வெறுமையில் தவிக்கிறாராம்.. அப்பாவை நினைத்து ஃபீலிங்.. அவங்களே சொல்லியிருப்பதை பாருங்க
சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் இப்போது திருமணம் செய்துகொண்டு செட்டிலாகியிருக்கிறார். சின்னத்திரையில் நடக்கும் சில நிகழ்ச்சிகளில் மட்டும் நடுவராக பங்கேற்றுவருகிறார். மேலும் நடிப்பதற்கும் அவர் ஆசையாகவே இருக்கிறார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று அனைவரிடமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஆந்திராவை சேர்ந்த ரம்பா தெலுங்கு திரையுலகத்தில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அங்கு அவருக்கு சூப்பரான வரவேற்பு கிடைத்ததை அடுத்து கோலிவுட் கதவுகளும் திறந்தன. அதன்படி உழவன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்படத்துக்கு பிறகு உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, சுந்தர புருஷன், அருணாச்சலம், விஐபி, ராசி, ஜானகிராமன், நினைத்தேன் வந்தாய் என பல வெற்றி படங்களில் நடித்து; ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

செம பிஸி: ஒருகட்டத்தில் நிற்பதற்குகூட நேரமின்றி பல படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. கிளாமர் ரோல் மட்டுமின்றி எந்த ரோலாக இருந்தாலும் அவர் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட்டு சென்றார். குறிப்பாக அவரது தொடைக்கென்றே தமிழ்நாட்டில் ஏராளமானோர் ரசிகர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் சில படங்கள் தோல்வியடைந்த பிறகு ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் நிலைமைக்கும் சென்றார்.
திருமணம் செய்துகொண்ட ரம்பா: ஒருகட்டத்தில் அந்த வாய்ப்புகளும் குறைந்து போனதை தொடர்ந்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மணமுடித்த கையோடு வெளிநாட்டுக்கு சென்று செட்டிலான ரம்பா; தனது கணவரின் தொழிலுக்கு பக்கபலமாக இருந்தார். அவ்வப்போது தமிழ்நாட்டுக்கு வந்து தனது பழைய நண்பர்கள், நண்பிகளை சந்தித்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
கம்பேக் தரும் ரம்பா?: சூழல் இப்படி இருக்க சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பொறுப்பு வகித்தார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க; மறுபக்கம் அவரை மீண்டும் நடிக்க வைக்க பலரும் முயற்சித்து வருகிறார்களாம். ரம்பாவும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதற்கு ஆர்வமாகி; சில கதைகளை கேட்டுவருவதாகவும்; விரைவில் அவர் நடிக்கும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரலாம் என்றும் திரைத்துறையிலிருந்து குரல்கள் கேட்கின்றன.
ரம்பாவின் இன்ஸ்டா போஸ்ட்: இந்நிலையில் ரம்பா தனது தந்தை குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கத்துடன் பதிவிட்டிருக்கிறார். அவர் அந்தப் பதிவில், "அன்புள்ள அப்பா. எனது இதயத்தில் நீங்கள் பிடித்திருக்கும் இடத்தை யாராலும் மாற்ற முடியாது என்பதை நான் அறிவேன். நான் சண்டை போட்டிருந்தாலும் உங்களுக்கு தொந்தரவு கொடுத்திருந்தாலும் எப்போதும் நீங்கள் அதே புன்னகையுடன் அனைத்தையும் எதிர்கொண்டீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த உலகமே வெறுமையாக தெரிகிறது. உங்களை மிஸ் செய்கிறேன் அப்பா" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
