தீராத விளையாட்டுப் பிள்ளை ஜோதியை ஞாபகமிருக்கா?.. இப்பவும் ஆஷிக் பனாயா பாட்டுக்கு ஆடுவார் போல!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, கடந்த 2005ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். தமிழில், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தில் இவர் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.
கடந்த ஆண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை தனுஸ்ரீ தத்தா, தாம் சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார். காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும், பணியாளர்கள் இன்றி உடல்நலக்குறைவுடனும் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மன அழுத்தத்தில் இருந்து வந்த தனுஸ்ரீ தத்தா இப்போ தான் ரிலாக்ஸாக சுற்றுலா சென்றுள்ளார். அங்கே நீச்சல் உடையில் எடுத்த கவர்ச்சி போட்டோவை அவர் சற்றுமுன் வெளியிட அது தீயாக பரவி வருகிறது.
ஆஷிக் பனாயா
விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் போல்டான காதலி ஜோதி கதாபாத்திரத்தில் நடித்து "தங்கா தங்கா தங்கா இவ தாவணி போட்ட தங்கா என ஆடி அசத்தியவர் தான் தனுஸ்ரீ தத்தா. இவர் நடித்த முதல் படமே ஆஷிக் பனாயா ஆப்னே தான் ஹிம்ரான் ஹாஷ்மி உடன் இவர் கவர்ச்சி பொங்க நடனமாடிய "ஆஷிக் பனாயா" பாடல் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.
கண்ணீருடன் வீடியோ
கண்ணீருடன் வெளியான வீடியோவில், அவர் கூறியதாவது: "கடந்த 2020 முதல் தினசரி என் வீட்டில் விசித்திர சத்தங்களை எதிர்கொள்கிறேன். மேற்கூரை மீதும், கதவுக்கு வெளியேயும் அசாதாரண சத்தங்கள் கேட்கின்றன. கட்டிட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து சோர்வடைந்தேன், சில வருடங்களுக்கு முன்பே அதை நிறுத்திவிட்டேன்."
"இந்த சத்தங்களுடன் வாழப் பழகிவிட்டேன். மன அமைதிக்கு இந்து மந்திரம் ஒலிக்கும் ஹெட்போன்களை அணிகிறேன். தற்போது நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக மனஅழுத்தம், பதற்றத்தால் நாள்பட்ட சோர்வு நோய் அறிகுறி உருவாகியுள்ளது," என அவர் கூறினார்.
மற்றொரு வீடியோவில் கண்ணீர்மல்கப் பேசிய அவர், "சொந்த வீட்டிலேயே என்னை கொடுமைப்படுத்துகின்றனர். 'மீ டூ' புகார் அளித்ததிலிருந்து துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள். மன அழுத்தம் காரணமாக எனது உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது," என்று வேண்டுகோள் விடுத்தார்.
நீச்சல் உடையில் ஜம்முன்னு
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த தனுஸ்ரீ தத்தா 2013ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதையே நிறுத்தி விட்டார். காதல் தோல்விக்குப் பிறகு 41 வயதாகியும் இவர் திருமணமே செய்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், மன அழுத்தம் குறைந்து வரும் நிலையில், நீச்சல் உடையில் செம ஜம்முன்னு அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி போஸ் வைரலாகி வருகிறது. பழையபடி சினிமாவிலும் நடிக்க ஆரம்பிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











