நான் ரொம்ப பிசி.. யார்கிட்டயும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல, ஆமா.. பிரபல ஹீரோயின் டென்ஷன்!

By

சென்னை: தன்னைப் பற்றி தவறானத் தகவல்கள் பரவி வருவதாகத் தெரிவித்துள்ளார், நடிகை தமன்னா.

Recommended Video

Tamannaah Bhatia Healthy Breakfast Recipe | Lock Down

தமிழில், கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா. இந்தப் படம் அதிகம் கவனிக்கப்படவில்லை என்றாலும் அழகான இரண்டு ஹீரோயின்களை தந்த சினிமா இது.

ஒருவர் இலியானா, இன்னொருவர் தமன்னா. இந்தப் படத்தைத் தொடர்ந்து, வியாபாரி, கல்லூரி, அயன், கண்டேன் காதலை, பையா, வீரம், பாகுபலி 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்தார் தமன்னா.

கபடி பயிற்சியாளர்

கபடி பயிற்சியாளர்

இப்போது, நவம்பர் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதை ராம் சுப்ரமணியன் என்பவர் இயக்கியுள்ளார். தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில், கபடி பயிற்சியாளராக நடித்து வருகிறார். இவர் தெலங்கானா மாநில கபடி பயிற்சியாளராகவும் ஹீரோ கோபிசந்த் ஆந்திர மாநில கபடி பயிற்சியாளராகவும் நடித்து வருகின்றனர். கொரோனா பிரச்னை முடிந்து இதன் ஷூட்டிங் தொடங்கும்.

சவாலான படம்

சவாலான படம்

சமீபத்தில் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்ன தமன்னா, நடித்த படங்களிலேயே அதிக சவாலை எதிர்கொண்டது பாகுபலிதான் என்றும் அது திருப்தியான அனுபவம் என்று கூறி இருந்தார். கேமரா முன் நின்று ஒவ்வொரு நாளும் புதிது புதிகாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

சரியாக ஓடவில்லை

சரியாக ஓடவில்லை

இந்நிலையில், தன்னைப் பற்றி தவறானத் தகவல்கள் பரவி வருவதாகத் தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா. இந்தியில் அவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என்பதால், அவர் ராசியில்லாத நடிகையாகி விட்டார் என்றும் அதனால் இந்தி சினிமாவில் இருந்து விலகி விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

போட்டி இல்லை

போட்டி இல்லை

இதைக் குறிப்பிட்டுள்ள நடிகை தமன்னா, 'சமீபத்தில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருந்தது. நான், வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். வருடத்தின் 365 நாட்களிலும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் நடிகை நான். எனக்கு எந்த போட்டியும் இல்லை. யாரிடமும் என்னை நிரூபிக்க வேண்டியதில்லை.

வெற்றி தோல்வி

வெற்றி தோல்வி

என் சொந்த முயற்சிகளில் என் அடையாளத்தை உருவாக்க நினைக்கிறேன். பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமா என்னை ஏற்றுக்கொண்டு விட்டது. என்னைப் பொறுத்தவரை நடிப்பது மட்டும்தான் என் வேலை. அதை முழு அர்ப்பணிப்புடன் செய்கிறேன். அதில் நான் திருப்தியாகவே இருக்கிறேன். ஆனால், படத்தின் வெற்றி தோல்வி என்பது என் கைகளில் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X