தர்ஷன்-சனம் காதல் முறிவு.. அமைதியை பலவீனமாக நினைக்க வேண்டாம்.. முதல் முறையாக மவுனம் கலைத்த ஷெரின்!

சென்னை: தர்ஷன் - சனம் ஷெட்டி இடையிலான காதல் முறிவு குறித்து நடிகை ஷெரின் முதல் முறையாக பேசியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மீண்டும் பிரபலமானவர் நடிகை ஷெரின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுடன் நெருங்கி பழகினார்.

தர்ஷனை ஒரு தலையாகவும் காதலித்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன், ஏற்கனவே நிச்சயம் செய்திருந்த தனது காதலியான சனம் ஷெட்டியை புறக்கணித்தார்.

ஷெரினுடன் நெருக்கம்

ஷெரினுடன் நெருக்கம்

அவரை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தார். இந்த விவகாரம் போலீஸ் கோர்ட் என சென்றதால் மீடியாக்களுக்கு வந்தது. தர்ஷன், சனம் ஷெட்டியை பிரிய பிக்பாஸ் வீட்டில் அவருக்கு கிடைத்த சில பெண் தோழிகளின் நட்பே காரணம் என்றும் கூறப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே ஷெரினுடன் நெருக்கமாக இருந்தார் தர்ஷன்.

ஷெரின் விளக்கம்

ஷெரின் விளக்கம்

அப்போதே சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கப்பட்டார். இதனால் சனம் ஷெட்டியுடனான காதலை தர்ஷன் முறித்துக் கொள்ள ஷெரின் தான் காரணம் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்து வந்தன. மேலும் ஷெரினை திட்டித் தீர்த்தும் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை ஷெரின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஷெரின் எச்சரிக்கை

ஷெரின் எச்சரிக்கை

அதில் என் குடும்பத்தாரை எதுவும் பேசாதீர்கள் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் உலகத்தில் இந்த இருவருக்குமான காதல் முறிவை விட பெரிய பிரச்சனைகள் எல்லாம் உள்ளது என்றும் நக்கலாய் பேசியிருக்கிறார். அதோடு நான் எதுவும் பேசாமல் இருப்பதால் அதை என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறார் ஷெரின்.

வாய்திறந்த ஷெரின்

வாய்திறந்த ஷெரின்

காதல் முறிவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்றும் கூலாக கூறியிருக்கிறார். சனம் ஷெட்டி - தர்ஷன் காதல் முறிவுக்கு ஷெரின் தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்ட நிலையில் அதுதொடர்பாக முதல் முறையாக அறிக்கை மூலம் வாய் திறந்து எனக்கும் அந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார் ஷெரின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X