அட திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கா?.. எங்கே தெரியுமா?.. ரசிகர்கள் ஆச்சரியம்
சென்னை: திரிஷாவின் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. மேலும் பிருந்தா என்ற வெப் சீரிஸும் ரிலீஸானது. இவற்றில் லியோ கலவையான விமர்சனத்தை பெற்றது; அதேபோல் பிருந்தா வெப் சீரிஸும் அந்த ரேஞ்சில்தான் இருந்தது. கடைசியாக அவர் விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்தார். அடுத்ததாக அவர் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் நாளை வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ் சென்னை பட்டம் வென்று பிரபலமான திரிஷா ஜோடி படத்தில் சிறிய வேடத்தில் தலை காட்டினார். அதற்கு பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது அழகுக்கும், நடிப்புக்கும் ரசிகர்கள் அடிமையானார்கள். அதனையடுத்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, ரஜினிகாந்த், கமல் ஹாசன் என வரிசையாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார்.
சரிந்த மார்க்கெட்: தொடர்ந்து படுபிஸியாக நடித்துவந்த திரிஷா இடையில் சின்ன சறுக்கலை சந்தித்தார். சூழல் இப்படி இருக்க பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த 96 படம் திரிஷாவுக்கு மீண்டும் தரமான கம்பேக்கை கொடுத்தது. அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த ஜானு என்ற கதாபாத்திரம் ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரம் போலவே கொண்டாடப்பட்டது. அதனையடுத்து திரிஷாவுக்கு வரிசையாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இதனால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.


மீண்டும் லைம் லைட்டில்: ஒரு நடிகை குறைந்தபட்சம் 10 வருடங்கள் டாப்பில் இருப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் திரிஷாவோ கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக டாப்பில் இருக்கிறார். 96 படத்துக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அதற்கு பிறகு விஜய்யுடன் பல வருடங்கள் கழித்து லியோ படத்தில் நடித்தார். மேலும் GOAT படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருந்தார்.
முன்னணி ஹீரோக்களுடன்: திரிஷாவின் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களில் விடாமுயற்சி தோல்வியையும், குட் பேட் அக்லி மெகா ஹிட்டையும் பெற்றது. படங்களின் ரிசல்ட்டையும் தாண்டி திரிஷாவின் நடிப்பும், அழகும் பலரையும் கவர்ந்தது. அடுத்ததாக கமல்ஹாசனுடன் அவர் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்பு: இந்தப் படத்தின் ட்ரெய்லரில் கமலுக்கும், திரிஷாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது.மேலும் ரொமான்ஸ் காட்சிகளும் இருந்தன. எனவே படத்தில் அவர்கள் எப்படி நடித்திருப்பார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். அதேபோல் சுகர் பேபி பாடலை திரிஷாவே பாடியிருப்பதும் பலரிடம் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திரிஷா பெயரில் ஊர்: இந்நிலையில் திரிஷாவின் பெயரில் ஒரு கிராமம் இருக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது லடாக் மாநிலத்தில் இருக்கும் அந்த கிராமத்தின் பெயர் பலகையோடு இருக்கும் வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதனைப் பார்த்த பலரும் திரிஷா பெயரில் ஒரு கிராமமா என ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











