நாங்க பிரென்ட்ஸ்தான்.. லவ்வுல்லாம் இல்லை.. கிரிக்கெட்டர் உடனான கிசுகிசு குறித்து நடிகை விளக்கம்!
திருவனந்தபுரம்: கிரிக்கெட்டர் உடன் காதல் என பரவிய தகவல் குறித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் திரிச்சூரை பூர்விகமாக கொண்டவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
பிரேமம் படத்தில் இவர் நடித்த மேரி கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி படத்தில் நடித்தார்.

செய்திகளில் அடிபடும் பெயர்
தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என பிஸியாக உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அனுபமாவின் பெயர் அடிக்கடி செய்திகளில் இடம் பெற்றுவருகிறது.

சோஷியல் மீடியாவில் பழக்கம்
அதாவது, அனுபமாவும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான
ஜஸ்பிரித் பும்ராவும் காதலிப்பதாக செய்திகள் பரவின. இவர்கள் இருவரும் சோஷியல் மீடியாவில் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் பதிலளிப்பது பழகி வந்தனர்.

நடிகை விளக்கம்
இதனால் இருவரும் காதலிக்கிறார்கள், டேட்டிங் என சுற்றுகிறார்கள் என்ற வதந்தி தீயாய் பரவியது. இந்நிலையில் இதுதொடர்பாக நடிகை அனுபமா விளக்கம் அளித்துள்ளார். அதாவது நானும் பும்ராவும் காதலிக்கவில்லை. நாங்கள் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் காதல் இல்லை என தெரிவித்துள்ளார்.

24ஆக குறைவு
இதனிடையே பும்ரா நடிகை அனுபமாவை சமூக வலைதளத்தில் ஃபாலோ செய்வதை நிறுத்தியுள்ளார். டிவிட்டரில் இதுவரை 25 பேரை ஃபாலோ செய்து வந்த பும்ரா, அனுபமாவை ஃபாலோ செய்வதை நிறுத்தியுள்ளதால் அவரின் ஃபாலோயிங் எண்ணிக்கை 24ஆக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











