இந்த நடிகைகள் கொஞ்சம் சாப்பிட்டு வெயிட் போட்டால் தான் என்ன?

By Siva

மும்பை: ஒல்லிக்குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகளில் சிலர் நிச்சயம் ஒழுங்காக சாப்பிட்டு கொஞ்சம் வெயிட் போட வேண்டும்.

பாலிவுட் நடிகைகள் உணவுக் கட்டுப்பாடு அது தான் டயட் என்ற பெயரில் ஸ்டைல் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். அதன் விளைவு அவர்கள் பென்சில் போன்று குச்சியாக உள்ளனர். என்னங்க இப்படி ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கேட்டால் நிஜமாகவா ஒல்லியாக இருக்கிறேனா என்று கூறி சந்தோஷப்படுகிறார்கள்.

இப்படி போட்டி போட்டுக் கொண்டு ஒல்லிப்பாச்சானாக இருக்கும் நடிகைகளில் இவர்கள் நிச்சயம் கொஞ்சம் வெயிட் போட வேண்டும்.

அனுஷ்கா

அனுஷ்கா

நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிக்கும் இடையே காதல் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. நடிகை நாளுக்கு நாள் உடல் எடையை குறைத்து குச்சியாகிக் கொண்டிருக்கிறார். இவர் நிச்சயம் கொஞ்சம் சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க வேண்டும்.

நர்கிஸ்

நர்கிஸ்

ராக்ஸ்டார் படம் மூலம் பாலிவுட் வந்த நர்கிஸ் ஃபக்ரி ஏற்கனவே எலும்பும் தோலுமாக உள்ளார். இந்நிலையில் தான் நடித்து வரும் ஒரு படத்திற்காக ஜூஸ் மட்டும் குடித்து 6 நாட்களில் 3 கிலோ எடையை குறைத்துள்ளார். நர்கிஸ் நீங்கள் நிச்சயம் கொஞ்சம் வெயிட் போட வேண்டும். இல்லை என்றால் பலமாக காற்றடித்தால் பறந்துவிடுவீர்கள்.

கல்கி

கல்கி

நடிகை கல்கி கொச்லினுக்கு எலும்பை தோல் போர்த்தியுள்ளது போன்று குச்சியாக உள்ளார். அவர் எல்லாம் நிறைய சாப்பிட வேண்டும். கொஞ்சமாக வெயிட் போட்டால் தப்பில்லை கல்கி.

ஸ்ருதி

ஸ்ருதி

கமல் ஹாஸனின் மூத்த மகளான ஸ்ருதிக்கு நடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அது அவரது ரத்தத்திலேயே உள்ளது. ஆனால் சாப்பிட்டு வெயிட் போடுவது எப்படி என்று கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஷ்ரத்தா

ஷ்ரத்தா

ஆஷிகி 2 வெற்றி படம் கொடுத்த ஷ்ரத்தா கபூர் பள்ளி மாணவி போன்று இருக்கிறார். அவர் ஒல்லிக்குச்சியாக இருப்பதாகவும், உடல் எடையை நிச்சயம் அதிகரிக்க வேண்டும் என்றும் நடிகர் இம்ரான ஹஷ்மி கூட ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X