பாலியல் கல்வியெல்லாம் தேவையில்லை.. ’பாய்ஸ் லாக்கர் ரூம்’ சர்ச்சை.. வெளுத்து வாங்கிய பிரபல ஹீரோயின்!
சென்னை: பாய்ஸ் லாக்கர் ரூம் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து லீக்கான சில சாட்டிங் புகைப்படங்கள் இந்தியளவில் பல பிரபலங்களை திகைக்க வைத்திருக்கிறது.
Recommended Video
பள்ளிக்கு செல்லும் வயது உள்ள பசங்க, பெண்களை எப்படி பாலியல் பலாத்காரம் செய்வது என்றும் கூட்டு பாலியல் பலாத்காரங்கள் குறித்தும் பல விஷயங்களை அந்த க்ரூப்பில் சர்வ சாதாரணமாக பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விஷயம் வைரலான நிலையில், பிரபலங்கள், இளைஞர்கள் என பலரும் மாணவர்களுக்கு பாலியல் கல்வி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

எல்லாமே ஆபாசம்
டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உருவாக்கி உள்ள இந்த க்ரூப்பில், பெண்களை எந்த அளவுக்கு இழிவாக சித்தரிக்க முடியுமோ, பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆபாச பேச்சுக்கள் ‘Boys locker room' என்கிற க்ரூப் சாட்டிங்கில் இருப்பதை சிலர் அம்பலப்படுத்தி இந்தியாவையே அதிரவைத்துள்ளனர்.

பிரபலங்கள் கண்டனம்
இளம் வயதிலேயே இப்படியொரு விஷச் செடிகளாய் மாணவர்கள் வளர்வதை தடுக்க வேண்டும் என்றும், பெண்களை மதிக்கத் தெரியாமல், இவ்வளவு ஆபாசமாக கருதுவதும், பாலியல் பலாத்காரம் செய்வதை சகஜமான மனநிலையில் எப்படி அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் பல பிரபலங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாலியல் கல்வி
பிஞ்சிலேயே பழுத்த இதுபோன்ற மாணவர்களால் தான் நாட்டில் பெண்களுக்கு பல கொடுமைகள் நடப்பதாகவும், அவர்களுக்கு முறையான பாலியல் கல்வியை அரசாங்கம் கொடுப்பது ஒன்றே இது போன்ற விஷயங்களை தவிர்க்க உதவும் என பாலிவுட் நடிகைகளான ரிச்சா சத்தா, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமைரா தஸ்தூர் சுளீர்
இந்நிலையில், தனுஷின் அநேகன், ஜாக்கி சானுடன் குங்ஃபூ யோகா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை அமைரா தஸ்தூர், பசங்களுக்கு பாலியல் கல்வி எல்லாம் ஒண்ணும் தேவையில்லை. முதலில் ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதையும், பெண்கள் பற்றிய சிந்தனையில் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதையுமே அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆண் எனும் அகம்பாவம்
மேலும், பலாத்காரம் என்றால் என்ன என்பதை அவர்கள் பாலியல் கல்வி மூலம் தெரிந்துக் கொள்ள தேவையில்லை, அது மீண்டும் பெண்கள் குறித்த தவறான படிப்பினையைத் தான் வளர்க்கும். ஆணினம் தான் உயர்ந்தது என்ற அகம்பாவம் அவர்கள் மனங்களில் இருந்து அடியோடு ஒழிய வேண்டும் என விளாசி தள்ளியுள்ளார்.


Click it and Unblock the Notifications











