Nithya menen: நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம்…மாப்பிள்ளை யார் தெரியுமா?
சென்னை: நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
1998ம் ஆண்டு வெளியான ஹனுமான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நித்யா மேனன், மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் வெப்பம், 180 டிகிரி உள்ளிட்ட படங்களின் மூலமாக கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

ராகவா லாரன்சுடன் இணைந்து காஞ்சனா படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்திருந்தார். அதன் பின் தளபதி விஜய்க்கு ஜோடியாக மெர்சல் படத்திலும், தனுஷூக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
நடிகை நித்யா மேனன்: தனுஷூடன் இவர் ஜோடி போட்டு நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தனுஷை விட அந்த படத்தில் ஷோபனாவாக நடித்த நித்யா மேனனின் நடிப்பை வெகுவாக பாராட்டி, கிடைச்ச இப்படி கேர்ள் பிரண்ட் கிடைக்கனுபா என இளசுகள் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
திருமண ஆகவில்லை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகை நித்யா மேனனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. திரையுலகில் உள்ள பல நடிகர்களும் திருமணம் நடந்து வரும் நிலையில், நடிகை நித்யா மேனனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் திருமணம்: சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே நித்யா மேனன் தனது,நெருக்கிய நண்பரும், மலையாள நடிகரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும், இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











