For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பார்த்து ரொம்ப நாளாச்சு… ஆச தீர பாக்கலானு பாத்தா... தலைகீழாக யோகாசனம் செய்யும் மாளவிகா!

  |

  சென்னை : நடிகை மாளவிகா தலைகீழாக யோகா செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  தமிழ் திரைப்படங்களைத் தவிர தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி என 5 மொழி படங்களில் நடித்துள்ளார்.

  தாறுமாறாய் தாராளம் காட்டும் வெப் சீரிஸ் நடிகை.. 3 மில்லியனாக எகிறிய ஃபாலோயர்ஸ்!தாறுமாறாய் தாராளம் காட்டும் வெப் சீரிஸ் நடிகை.. 3 மில்லியனாக எகிறிய ஃபாலோயர்ஸ்!

  திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்த விலகி இருக்கும் இவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

  மாளவிகா

  மாளவிகா

  மாடல் அழகியான மாளவிகா தமிழ் , தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1999ம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் நடித்தார்.

  காந்தக்கண்கள்

  காந்தக்கண்கள்

  ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். உதட்டிலிருந்து பிரியும் லேசான புன்சிரிப்பும், காந்தக் கண்களும் சற்றேறக்குறைய நடிகை ரோஜாவின் சாயலில் வந்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தார். ஏனோ தெரியவில்லை. அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டியிருப்பார்.

  வெற்றிக்கொடிகட்டு

  வெற்றிக்கொடிகட்டு

  வெளிநாட்டுக்கு வேலைதேடி செல்லும் இளைஞர்களின் நிலைகுறித்து சமூக அக்கறையுடன் வெளிவந்த திரைப்படம் தான் வெற்றிகொடி கட்டு. இத்திரைப்படத்தில் பார்திபன், முரளி, மீனா, மாளவிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.இத்திரைப்படத்தில் இடம் பெற்ற கறுப்புத்தான் எனக்கு பிடிக்க கலரு பாடல் இன்று வரைக்கும் அனைவரின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.

  தெலுங்கில் கவனம்

  தெலுங்கில் கவனம்

  2002-2003ல் இவர் நடித்த தமிழ்த்திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் தெலுங்கு பக்கம் சென்றார். 2004ம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து பாலிவுட்டுக்குச் சென்றார். அங்கு சீ யூ எட் 9 என்ற படத்தில் நடித்தார். மேலும், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

  சந்திரமுகி

  சந்திரமுகி

  பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, வடிவேல், பிரபு ஆகியோருடன் மாளவிகா பிரியா விசுவநாதன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். வித்யாசாகரின் இசையில் பாடல்கள் மெகா ஹிட். இப்படம் 1999ல் வெளியான படையப்பா வசூலை முறியடித்தது.

  ஏராளமான படங்கள்

  ஏராளமான படங்கள்

  சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் பட்டையை கிளப்பியிருப்பார். இந்த திரைப்படத்தை அடுத்து ஜீவாவுடன் திருட்டுபயலே திரைப்படத்தில் ஒருவித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்தார் மாளவிகா.

  Bigg Boss Samyuktha வின் அசத்தல் Dance, Rio Raj Work Out Challenge
  திருமணம்

  திருமணம்

  2007ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண்குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகாக குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி விட்டார்.

  தலைகீழாக யோகாசனம்

  தலைகீழாக யோகாசனம்

  பேஸ் புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் தலைகீழாக யோகா சனம் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இணையத்தில் இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.

  English summary
  The original name of Malavika is Shweta and hence, she is using it on her official Instagram page. she shared a yoga photo on her instagram page.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X