Malavika: நடுக்கடலில் குட்டை உடையில் நடிகை மாளவிகா.. என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க!
சென்னை: நடிகை மாளவிகா தமிழில் அஜித்திற்கு ஜோடியாக உன்னைத் தேடி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றால், தமிழில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகினார்கள். சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே நடிகை மாளவிகா அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து பிரபலமானார். சினிமாவில் வாய்ப்பு குறைய ஆரம்பித்த உடனே, திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மாளவிகா, இணையத்தில் எப்போதும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நடுக்கடலில் ஆட்டம் போட்ட போட்டோவை அவர் ஷேர் செய்துள்ளார்.
மாடல் அழகியான மாளவிகா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் படவாய்ப்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்ற மாளவிகா ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தமிழில், சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். பின் படவாய்ப்பு இல்லாததால், சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் பாடலில் பட்டையை கிளப்பியிருந்தார்.

நடிகை மாளவிகா: இதையடுத்து, ஜீவாவுடன் சேர்ந்து திருட்டுபயலே படத்தில் நடித்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் நல்ல படவாய்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி மாளவிகாவிற்கு படவாய்ப்பு வரவில்லை. இது தான் திருமணம் செய்து கொள்ள சரியான நேரம் என முடிவு செய்த மாளவிகா, 2007ஆம் ஆண்டு தொழிலபிதி சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவருக்கு, ஆரவ் என்கிற ஒரு ஆண்குழந்தையும் அன்யா என்கிற ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
நீச்சல் உடையில்: திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா, அவ்வப்போது சமூக வலைத்தள பக்கத்தில் குடும்பத்தோடு இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்த தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் தற்போது, நீச்சல் உடையில் நடுக்கடலில் நீச்சல் அடித்து அலப்பறை செய்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











