தனுஷின் நானே வருவேன்... ஹீரோயின் இவர் தானா....வெளியான சூப்பர் அப்டேட்
சென்னை : பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். அதே சமயம் அவரின் அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புக்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. மாறன், திருச்சிற்றம்பலம், பாலிவுட், டோலிவுட் படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது அண்ணனும், டாப் டைரக்டருமான செல்வராகவன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க போவதாக கூறப்பட்டது. இந்த படத்திற்கு நானே வருவேன் என டைட்டிலும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு எதுவும் கூறாததால், இந்த படத்தின் அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

நானே வருவேன் ஷுட்டிங்
ஆனால் செல்வராகவன் விஜய்யுடன் பீஸ்ட், கீர்த்தி சுரேஷ் உடன் சாணி காயிதம் ஆகிய படத்திலும் நடித்து வருகிறார். இதனால் நானே வருவேன் படம் வருமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் நானே வருவேன் படத்தின் ஷுட்டிங் நேற்று துவங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய லுக்கில் தனுஷ்
இதுவரை நடிக்காத புதிய லுக்கில் தனுஷ் இந்த படத்தில் நடிக்க போகிறாராம். இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் போஸ்டர் செம வரவேற்பை பெற்றது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்க போகிறாராம்.

இரண்டு போஸ்டர்கள்
படத்தின் ஷுட்டிங் துவக்கத்தை முன்னிட்டு இரண்டு போஸ்டர்களை படக்குழு நேற்று வெளியிட்டது. அதோடு படத்தின் பூஜை தொடர்பான ஃபோட்டோக்களும் இணையத்தில் வெளியானது. இதில் தனுஷ் மற்றும் செல்வராகவன் தங்களின் பெற்றோருடன் கலந்து கொண்டனர். கலைப்புலி எஸ்.தாணுவும் கலந்து கொண்டார்.

இவர் தான் ஹீரோயினா
இந்த ஃபோட்டோவில் தனுஷ் மற்றும் செல்வராகவனுடன் நடிகை இந்துஜா ரவிச்சந்திரனும் உள்ளார். இதன் மூலம் இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. விரைவில் படம் பற்றிய மற்ற அப்டேட்கள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

தனுஷ் ஹீரோயின்கள்
தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் மாளவிகா மோகனன், திருச்சிற்றலம்பலம் படத்தில் ராஷி கண்ணா, பிரியாபவானி சங்கர், நித்தியா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷுடன் இந்துஜா ஜோடி சேர உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அவர் தான் இவரா
இந்துஜா ரவிச்சந்திரன், மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் வேம்பு கேரக்டரில் நடித்து பிரபலமானவர். தற்போது விஜய் ஆன்டனி நடிக்கும் காக்கி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











