Don't Miss!
- Technology
புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் அதிரடி காட்டும் Netflix: என்னென்ன அம்சங்கள்.!
- News
பாஜக கூட்டணிக்கு அதிமுக இபிஎஸ் அணி குட்பை? அண்ணாமலை சந்திப்பு வேஸ்ட்? வெளுத்து கட்டிய பொன்னையன்!
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Finance
3 அதானி குழும பங்குகள் மீது கூடுதல் கண்காணிப்பு.. NSE அறிவிப்பு..!
- Sports
"இந்தியா அநியாயமாக நடந்துக்கொண்டது" ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளி... நயன்தாரா உற்சாகம்
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த.
இந்தப் படம் தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளது.
கமல்
முன்
சண்டை
போடும்
நிரூப்
–
அக்ஷரா...
அப்படி
என்ன
பிரச்சனை
இவங்களுக்கு
?
இந்நிலையில் இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளி என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

அண்ணாத்த படம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு என்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

டிக்கெட் விற்பனை ஜோர்
படத்தின் டிக்கெட் விற்பனை துவங்கியுள்ள நிலையில், டிக்கெட்டை புக் செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளதை அனைத்து சென்டர்களிலும் காண முடிகிறது. தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி விரைவில் டிஸ்சார்ஜ்
இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ட்ரெயிலர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தீபாவளி தினத்தில் ரஜினியின் திரைப்படம் வெளியாகவுள்ளதும் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் கருத்து
இந்தத் திரைப்படத்தை பிரீமியரில் பார்த்த அனைவரும் சிறப்பான கமெண்ட்டுகளை பதிந்து வருகின்றனர். படத்தை பார்த்த சௌந்தர்யா ரஜினிகாந்த், மீண்டும் சிவா கூட்டணியில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் என்ற தன்னுடைய ஆவலை வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்
தீபாவளியை அண்ணாத்த படத்துடன் இணைந்து கொண்டாட ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ள நிலையில் தற்போது இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளியாக இருக்கும் என்று படத்தின் நாயகி நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா உற்சாக பதிவு
படத்தின் காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ள அவர், சும்மா சரவெடி தான் என்று குறிப்பிட்டு அதை உணர்த்தும் வகையில் சில எமோஜிக்களையும் இணைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகள் கடந்த ஒரு மாத காலமாகவே மிகவும் சிறப்பாக செயப்பட்டு வருகிறது.