ரொம்ப தப்பு.. ‘இதை நிறுத்தியே ஆகணும்’.. ஆபாச கமெண்ட்டுகளுக்கு எதிராக களமிறங்கிய பிரபல நடிகை!
கேரளா: பாப்கார்ன், டிரான்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகை ஸ்ரீண்டா இன்ஸ்டாகிராமில் தனக்கு வரும் ஆபாச கமெண்ட்டுகளுக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளார்.
தங்கள் திறமைகளை சமூகத்தில் வெளிக்கொண்டு வர உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்களை, பலரும் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
சாதாரண பெண்கள் தொடங்கி பிரபல நடிகை என யாராக இருந்தாலும், அவர்களது சமூக வலைதள கணக்குகளின் கீழ் பதிவிடப்படும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் கீழே நூற்றுக் கணக்கான ஆபாச கமெண்ட்டுகள் சர்வ சாதாரணமாக வந்து விழுகின்றன.

மலையாள நடிகை
மம்மூட்டி, நிவின் பாலி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்து புகழ்பெற்றுள்ளார் மலையாள நடிகை ஸ்ரீண்டா. ஃபோர் பிரெண்ட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர், 22 ஃபீமேல் கோட்டயம், அன்னையும் ரசூலும், 1983 மற்றும் தமார் படார் உள்ளிட்ட பல பிரபல மலையாள படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ரொம்ப கேவலம்
ஸ்ரீண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதில்லை. மாறாக அவர் சாதாரணமாக சேலை அணிந்து, மாடர்ன் உடைகளை அணிந்தும் மட்டுமே புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஆனாலும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வரும் கமெண்ட்ஸ் எல்லை மீறி செல்வதாக தற்போது கொதித்தெழுந்துள்ளார்.

இதை நிறுத்தியே ஆகணும்
பெண்களுக்கு சமூக வலைதளத்தில் கொஞ்சம் கூட சுதந்திரமோ, பாதுகாப்போ இல்லை என்றும், இதுபோன்று படு அபாசமாக கமெண்ட் செய்பவர்களை சும்மா விடக் கூடாது. ‘This has to stop' என்ற வலிமையான போஸ்ட்டை நடிகை ஸ்ரீண்டா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அது என் இஷ்டம்
எப்படி உடை உடுத்த வேண்டும், என்ன மாதிரியான போஸ்ட்டை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என தனக்கு யாரும் கிளாஸ் எடுக்க வேண்டாம் என்றும், என்னுடைய பக்கத்தில் வந்து, நீங்கள் உங்கள் வக்கிர புத்தியைக் காட்டுவது ரொம்ப தப்பு, இதை முதலில் நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள் என கடுமையாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
Recommended Video

பல நடிகைகள்
இந்த லாக்டவுன் நேரத்தில், ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக பல நடிகைகள் தொடர்பில் இருக்க விரும்பி பல பதிவுகளை இட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் உடல் பாகங்களை தவறாக சித்தரித்தும், கொச்சைப் படுத்தியும் தான் பல நெட்டிசன்களும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதனை அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து நடிகைகள் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











