இது தான் எனக்கு 'ஃபர்ஸ்ட் டைம்': மகிழ்ச்சி கலந்த பயத்தில் ஹன்சிகா

By Siva

சென்னை: இது தான் எனக்கு முதல் முறை என்று கூறியுள்ள ஹன்சிகா மகிழ்ச்சி கலந்த டென்ஷனில் உள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகாவின் மார்க்கெட் டல்லடித்துள்ளது. அவரை போன்றே சிவப்பாக இருக்கும் சயீஷாவின் மார்க்கெட் தான் உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் ஹன்சிகா 50வது படத்தில் கமிட்டிாகியுள்ளார். அந்த படத்திற்கு மஹா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சினிமா குறித்து ஹன்சிகா பேட்டி ஒன்றில் கூறியதாவது,

மஹா

மஹா

50வது படத்தில் நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். மஹா என்பது ஹீரோயினை சுற்றி நகரும் கதை கொண்ட படம். முதல்முறையாக இது போன்ற படத்தில் நடிக்கிறேன். இது நன்றாக வரும் என்று நினைக்கிறேன். மஹா போன்ற படத்தில் நான் இதுவரை நடித்தது இல்லை. அதனால் அந்த படத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன்.

ஸ்க்ரிப்ட்

ஸ்க்ரிப்ட்

எனக்கு மஹா படத்தின் இயக்குனர் ஜமீலை முன்பே தெரியும். அவர் போகன் உள்ளிட்ட 2 படங்களில் என்னுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். அவர் மஹா ஸ்க்ரிப்டுடன் எனக்காக 6 மாதங்கள் காத்திருந்தார். நான் படங்களில் பிசியாக இருந்ததால் அவரை சந்தித்து கதை கேட்க முடியவில்லை. பின்னர் ஒரு வழியாக சந்தித்தோம். ஆனால் அவர் கதையை சொன்னவுடன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இரண்டாவது முறை சந்தித்த போதே நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முதல் சந்திப்பிலேயே தோன்றியது.

வெற்றி

வெற்றி

நான் வெற்றிகரமான நடிகையாவேன் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஏன் என்றால் நான் கடினமாக உழைக்கிறேன். அதனால் தான் என்னை தேடி நல்ல நல்ல படங்கள் வருகின்றது. நான் பெரிய படங்களில் நடிப்பேன் என்று தெரியும். என் கெரியரில் உச்சத்தை தொடுவேன் என்றும் தெரியும். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் புதிதாக ஏதாவது கற்கிறேன். நிறைய நல்லவர்களை சந்தித்துள்ளேன். பல லெஜன்டுகளை சந்தித்து பேசியுள்ளேன். தவறுகள் செய்வது இயற்கை. ஆனால் தவறு செய்துவிட்டோமே என்று இடிந்து போகும் ஆள் இல்லை நான்.

ஓவியம்

ஓவியம்

நான் கடந்த ஆண்டு மட்டும் 18 முதல் 19 ஸ்க்ரிப்டுகளை நிராகரித்துள்ளேன். முன்பெல்லாம் நான் ஆண்டுக்கு 8 படம் பண்ணினேன். தற்போது ஆண்டுக்கு 4 படங்கள் செய்கிறேன். அதற்காக நான் தினமும் வேலை பார்க்கவில்லை என்று அர்த்தம் இல்லை. நான் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளேன், மேலும் 2 படங்களின் வேலை முடியப் போகிறது. ஓவியம் வரைவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் வரைகிறேன் என்றார் ஹன்சிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X