விஜய்யுடன் நடிப்பீங்களா.. கேள்வி கேட்ட ரசிகர்கள்.. இந்த பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: தளபதி விஜய்யுடன் நடிப்பீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு, இப்படியொரு பதிலளித்துள்ளார் நடிகை அதிதி ராவ்.

Recommended Video

Vaathi Coming #QuarantineDance | Lock Down | Celebrity Quarantine

கடந்த 2007ம் ஆண்டு வெளியான சிருங்காரம் என்ற படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தின் மூலமாக தமிழுக்கு அதிதி ராவ் அறிமுகமானார்.

ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதிதி ராவ்

அதிதி ராவ்

ஆந்திராவை சேர்ந்த அதிதி ராவ், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என பல மொழிகளில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது என பன்முகத் திறமைகளை கொண்ட அதிதி ராவ் நடிப்பில் இந்த ஆண்டு சைக்கோ படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம்

ஐஸ்வர்யா ராய், மனிஷா கொய்ராலா, மதுபாலா என பல திறமையான நடிகைகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மணிரத்னம், காற்று வெளியிடை படத்தின் மூலம் அதிதி ராவையும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கினார். ரவி வர்மன் ஒளிப்பதிவில் அதிதி ராவின் முழு அழகும் வெளிப்பட்டு இருக்கும்.

படுக்கைக்கு அழைத்தார்கள்

படுக்கைக்கு அழைத்தார்கள்

சிருங்காரம் படத்தில் தேவதாசியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி ராவ், பாலிவுட், டோலிவுட், மலையாளம் என பல சினிமா இண்டஸ்ட்ரீயிலும் பணி புரிந்துள்ளார். முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்றால், சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் படுக்கைக்கு செல்ல வேண்டும், தன்னையும் அப்படி அழைத்தார்கள் என மீடூ சர்ச்சையை அதிதியும் கிளப்பியிருந்தார்.

ஆஸ்க் அதிதி

ஆஸ்க் அதிதி

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஷூட்டிங் இன்றி நடிகைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். தங்கள் ரசிகர்களுக்காக இந்த நேரத்தில் அடிக்கடி Ask என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். அண்மையில், அதிதி ராவும் தனது ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

விஜய்யுடன்

விஜய்யுடன்

மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் படங்களில் நடித்த அனுபவங்கள், இயக்குநர் மிஷ்கினின் சைக்கோ படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்த கேள்விகளுக்கு விடையளித்து வந்த அதிதி ராவிடம், விஜய் ரசிகர் ஒருவர் தளபதி விஜய்யுடன் எப்போது படம் நடிப்பீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தார்.

நான் ரெடி

நான் ரெடி

தளபதி விஜய்யுடன் நடிக்க எந்தவொரு நடிகை தான் தயக்கம் காட்டுவார்கள். தானும் ரெடி தான் என்றும், ஆனால், நீங்கள் அவரிடம் தான் என்னுடன் நடிக்க சம்மதமா என்பதை கேட்டுச் சொல்லவேண்டும் என்ற ரீதியில் நடிகை அதிதி ராவ் அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார்.

ஹேய் சினாமிகா

ஹேய் சினாமிகா

நடன இயக்குநரில் இருந்து இயக்குநராக புரோமோட் ஆகும் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ஹேய் சினாமிகா படத்தில் துல்கர் சல்மான் உடன் அதிதி ராவும் இணைந்து நடிக்கிறார். அந்த படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா கலவரத்துக்கு சற்று முன்பாகத்தான் அந்த படத்தின் பூஜை போடப்பட்டது.

மிஸ்ஸான பொன்னியின் செல்வன்

மிஸ்ஸான பொன்னியின் செல்வன்

ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா மேனன் என பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட நாயகிகளுக்கு வாய்ப்பு இருக்கும் நிலையில், மணிரத்னத்தின் ஃபேவரைட் நடிகையான அதிதி ராவ் எப்படி இந்த பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து மிஸ் ஆனார் என்பது தான் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X