Trisha - திரிஷா ஃபோனில் ஹீரோக்கள் நம்பர் இப்படித்தான் இருக்கும்.. அஜித் நம்பர் இல்லை.. அம்மணி செம விவரம்
சென்னை: நடிகை திரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக கோலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் அவர் கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார். இந்த சூழலில் தன்னுடன் நடித்த ஹீரோக்களின் பெர்சனல் நம்பரை அவர் எப்படி சேவ் செய்துவைத்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.
ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஸ்க்ரீனில் தலை காட்டியவர் திரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் நடித்து படமும் வெளியாகிவிட்டது. முதல் படத்திலேயே திரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முன்னணி நடிகை: முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் பப்ளியான ஹீரோயினைத்தான் கொண்டாடுவார்கள் என்ற மாயையை திரிஷா அடித்து நொறுக்கினார். அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அழகும், திறமையும் கூடிக்கொண்டே போக திரிஷாவுக்கு என்று ரசிகர்களும் கூடிக்கொண்டே போனார்கள். அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா.
குந்தவை திரிஷா: பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் திரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு அவர் தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. கடைசியாக அவரது நடிப்பில் லியோ வெளியானது. அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் தற்போது நடித்துவருகிறார்.
மீண்டும் லைம் லைட்டில்: திரிஷா இடையில் சறுக்கலை சந்தித்தார் என்பது உண்மைதான். ஆனால் விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு 96 படம் தரமான கம்பேக்காக அவருக்கு அமைந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் அவர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக டாப் லிஸ்ட்டில் ஹீரோயின்கள் வெகு சிலர்தான். அவர்களில் முதன்மையானவர் திரிஷா என்பது கவனிக்கத்தக்கது.
அடுத்த படம்: விடாமுயற்சி படம் மட்டுமின்றி கமல் ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் அவர் இணைந்திருப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஒருபக்கம் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் அவர் மறுபக்கம் ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்டிலும் கவனம் செலுத்திவருகின்றார். அந்தவகையில் அவர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று கூறப்படுகிறது. மேலும் ஹிந்தி படம் ஒன்றிலும் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.
ஹீரோக்களின் நம்பர் இப்படித்தான் இருக்கும்: திரிஷா அனைத்து ஹீரோக்களுடனும் சகஜமாக பழகக்கூடியவர். இந்த சூழலில் அவர் தன்னுடன் நடித்த ஹீரோக்களின் நம்பரை தனது மொபைலில் எப்படி சேவ் செய்திருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. அதன்படி சிம்பு நம்பரை சிம் என்றும், தனுஷ் நம்பரை D என்றும், விஜய் நம்பரை V என்றும், விக்ரம் நம்பரை கென்னி என்றும் சேவ் செய்திருப்பாராம். இதில் ட்விஸ்ட் என்னவென்றால் தன்னுடன் இணைந்து 4 படங்கள் நடித்திருக்கும் அஜித்தின் ஃபோன் நம்பர் திரிஷாவிடம் இல்லையாம்.
அதேபோல் நடிகர்களுடைய பெயரின் முதல் எழுத்தை மட்டும் அவர்களுடைய நம்பர்களுக்கு சேவ் செய்து வைத்திருப்பதற்கு காரணம் பிரைவசிதானாம். அவர் இல்லாத நேரத்தில் யாரிடமாவது மொபைல் சிக்கிவிட்டால் அவர்களுக்கு ஹீரோக்களின் நம்பர் தெரிந்துவிடக்கூடாது என்பதால் தான் இந்த ஏற்பாடாம். இதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











