Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இதுவும் ‘Non Sexual Harrasment’ தான்.. பயில்வான் ரங்கநாதனை பந்தாடிய ஓவியா.. என்னாச்சு தெரியுமா?
சென்னை: பிரபல நடிகைகள் சினிமாவை விட்டு ஓட காரணம் இதுதான் என நடிகர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோவுக்கு நடிகை ஓவியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
"டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்" என்கிற தலைப்பில் கடந்த ஜூலை மாதம் பயில்வான் ரங்கநாதன் தண்டோரா வாய்ஸ் எனும் யூடியூப் சேனலில் போட்ட வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஃப்ரெண்ட்ஷிப் படக்குழுவுடன் இணைந்து படம் பார்க்க ஓர் அரிய வாய்ப்பு!
நடிகை ஓவியா, அபிராமி, சுனைனா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பல நடிகைகள் குறித்து அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.
டார்ச்சர் செய்ததால்
சினிமாவில் சில நடிகர்கள் நடிகைகளுக்கு கொடுத்த டார்ச்சர் காரணமாக சினிமாவை விட்டே அவர்கள் விலகி சென்று விட்டதாக பிரபல நடிகைகளின் பெயர்களை பட்டியலிட்டே யூடியூபரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனது தண்டோரா வாய்ஸ் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நடிகைகள் பற்றி
"டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்" எனும் தலைப்பில் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட அந்த வீடியோவில் நடிகைகள் அபிராமி, சதா, பூஜா, சோனியா அகர்வால், சுனைனா மற்றும் ஓவியா உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களையும் கூறியுள்ளார்.
ஓவியாவை பற்றி
அந்த வீடியோவில் நடிகை ஓவியாவை பற்றியும் அவர் பேசியுள்ள நிலையில், அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த நடிகை ஓவியா இதுவும் ஒருவகையான பாலியல் அத்துமீறல் தான் என பயில்வான் ரங்கநாதனுக்கு பக்காவான பதிலடியை கொடுத்திருக்கிறார் நடிகை ஓவியா.
இதுவும் ஹராஸ்மென்ட் தான்
சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் நடிகை ஓவியா பயில்வான் ரங்கநாதனின் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து "This is what non sexual women harassment!" என கண்டித்து பதிவிட்டுள்ள நடிகை ஓவியா #WomensRights என்ற ஹாஷ்டேக்கையும் போட்டு பயில்வான் ரங்கநாதனை பந்தாடியுள்ளார்.
சின்மயி ஆதரவு
நடிகை ஓவியாவின் ட்வீட்டை பார்த்த பாடகி சின்மயி இந்த ஆளுக்கு இதுதான் பொழப்பு என்றும் ட்வீட் போட்டு ஓவியாவுக்கு ஆதரவாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும், ஏகப்பட்ட ரசிகர்களும் பயில்வான் ரங்கநாதன் பேசியதை கண்டித்து நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
சும்மா விடக் கூடாது
சில ரசிகர்கள் நடிகை ஓவியாவிடம் இந்த விவகாரத்தை வெறும் ட்வீட்டோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் மீது புகார் அளிக்க வேண்டும் என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். மேலும், சிலர் அந்த வீடியோவை நான் ரிப்போர்ட் செய்து விட்டேன். பலரும் ரிப்போர்ட் செய்தால் இனி அது போன்ற வீடியோக்களை அவர் வெளியிட முடியாது என்றும் கூறியுள்ளார்.
மற்றவர்களும் கேட்க வேண்டும்
நடிகை ஓவியா துணிச்சலோடு இந்த விவகாரத்தை அணுகியதை போலவே அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ள மற்ற நடிகைகளும் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக அணி திரண்டு புகார் அளிக்க வேண்டும் என்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எல்லாம் தெரிந்தது போல இப்படி பேசுபவர்களை சும்மா விடக் கூடாது என்றும் ஓவியாவுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.