சபாஷ்.. மிருணாள் தாக்கூர், கயாடு லோஹர், க்ரித்தி ஷெட்டி.. இந்த வாரம் யாரு படம் பார்க்கப் போறீங்க?

சென்னை: இந்த வாரம் தமிழ் சினிமாவில் மொத்தம் 3 ஹீரோயின்களின் நேரடி போட்டி வரும் ஏப்ரல் 10ம் தேதி அரங்கேற காத்திருக்கின்றன. இளைஞர்களை சமீப காலமாக கொள்ளை கொண்டு வரும் இந்த 3 நடிகைகளின் படங்கள் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் எந்த நடிகையின் படத்தைப் பார்க்க முதலில் தியேட்டருக்கு பறக்கப் போகின்றனர் என்பது தான் கேள்வியாக உள்ளது.

சாய் அபயங்கர் பாடல் மூலம் மீண்டும் கோலிவுட் ரசிகர்களை கொள்ளைக் கொண்டுள்ள டிராகன் பட நடிகை கயாடு லோஹரின் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்களா? அல்லது டிராகன் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் உடன் புதிதாக ஜோடி போட்டு நடித்துள்ள க்ரித்தி ஷெட்டி படத்தை பார்ப்பார்களா? என்கிற போட்டி பெரிதளவில் இருப்பதாக கூறுகின்றனர்.

This Week Mrunal Thakur Kayadu Lohar and Krithi Shetty ready to face clash on Big Screen

ஸ்ருதிஹாசன் விலகிய நிலையில், ஆத்வி சேஷ் நடித்த தெலுங்கு படமான டக்காயிட் படத்தில் மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். சமீபத்தில், வெளியான டிரைலரை பார்த்த ரசிகர்கள் மீண்டும் சீதா ராமம் போல மிருணாளுக்கு இந்த படம் அமையும் என எதிர்பார்க்கின்றனர்.

சபாஷ் சரியான போட்டி: தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரசிகர்களின் முதல் சாய்ஸ் க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துக்குத்தான் இருக்கும் என தெரிகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நீண்ட காலதாமதத்திற்கு பிறகு வெளியாகவுள்ள ஃபியூரிஸ்டிக் சயின்ஸ்ஃபிக்‌ஷன் லவ் ஸ்டோரியாக இந்த படம் உருவாகியுள்ள நிலையில், எந்தளவுக்கு ரசிகர்களை கவரும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

எப்படியாவது பிரதீப் ரங்கநாதன் மேஜிக் இந்த முறையும் ஒர்க்கவுட் ஆனால், படம் 100 கோடி வசூலை கலெக்ட் செய்துவிடும் என்கின்றனர். ஆனால், அதுவே தனக்கு ஒரு பெரிய பாரமாக மாறியுள்ளது என அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்த படமாக எல்ஐகே இருக்கும் என உறுதியளித்துள்ளார்.

கயாடு லோஹர் கம்மிங்: கடந்த ஆண்டு டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த கயாடு லோஹர் இந்த முறை பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியாக களமிறங்குகிறார். டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகவுள்ள 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை டார்கெட் செய்து இந்த வாரம் ஏப்ரல் 10 வெளியாக காத்திருக்கிறது.

மிருணாள் தாக்கூரின் டக்காயிட்: ஆத்வி சேஷ், மிருணாள் தாக்கூர், அனுராக் காஷ்யப் நடிப்பில் உருவாகியுள்ள டக்காயிட் திரைப்படமும் இந்த வாரம் திரைக்கு வருகிறது. சமீபத்தில், மிருணாள் தாக்கூர் கையில் விலங்கை மாட்டிக் கொண்டு அனுராக் காஷ்யப் படத்தின் புரமோஷனில் காமெடி செய்த காட்சிகள் வைரலான நிலையில், அந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தியேட்டரில் ஹீரோக்கள் ரசிகர்களை கவரப் போகிறார்களோ இல்லையோ, இந்த 3 ஹீரோயின்களும் நம்பி வரும் ஆடியன்ஸை ஏமாற்ற மாட்டார்கள் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X