திருமணம் ஆகல.. 3 குழந்தைகளுக்கு அம்மா.. 23 வயதில் ஆச்சரியப்பட வைக்கும் பராசக்தி நாயகி!

ஹைதராபாத்: பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா, தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கவுள்ளார். தனது வசீகரமான புன்னகையாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஸ்ரீலீலா, தமிழ் மற்றும் கன்னடத் திரையுலகில் ஏற்கனவே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.

'புஷ்பா 2' திரைப்படத்தின் "கிஷ்க்" என்ற பாடலின் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ஸ்ரீலீலா, அதன் பிறகு அந்த ஒரே பாட்டில் பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். சமூக வலைத்தளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் அவர், இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒவ்வொரு பதிவிற்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஸ்ரீலீலா விரைவில் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் பாலிவுட்டில் பிரபலமான 'ஆஷிகி' தொடரின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஜோடியைக, ஒரு ரொமாண்டிக் படத்தில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

Three Babies Mother Actress SREELEELA Makes Bollywood Debut With New Film Alongside Kartik Aaryan

3 குழந்தைகளுக்கு அம்மா: தனது அழகு மற்றும் நடிப்புத் திறமைக்கு அப்பால், ஸ்ரீலீலா தனது பெருந்தன்மைக்கும் பெயர் பெற்றவர். வெறும் 22 வயதிலேயே, அவர் ஒரு ஆதரவற்ற இல்லத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து, பொறுப்பான ஒரு தாயாக அவர்களை வளர்த்து வருகிறார். தற்போது மீண்டும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். எல்லோருக்குமோ உதவுவதற்கு மனதில் ஏதாவது ஒரு உந்துதலோ, அவரது சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற ஏதாவது சம்பவம் காரணமா என்ற கேள்வி ரசிகர்களுக்கு இப்போதும் உள்ளது. ஆனால் நடிகை இதுவரை அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. ஸ்ரீலீலா எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து நல்ல காரியங்கள் செய்து கொண்டு இருந்தால் போதும் என்றும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பராசக்தி நாயகி: தற்போது ஸ்ரீலீலா தமிழில் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு 100வது படம்.

பாலிவுட் ரசிகர்கள்: ஸ்ரீலீலா தனது திரை வாழ்க்கையை கன்னடப் படமான 'கிஸ்' மூலம் தொடங்கினார். இன்று, தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் வரை தனது முத்திரையைப் பதித்துள்ளார். பாலிவுட்டில் நுழையும் முன்பே ஸ்ரீலீலாவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகி உள்ளது. அவரது ஒவ்வொரு தோற்றமும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X