பத்தாம் வகுப்பு தேர்வில் 'கடல்' துளசி பாஸ்: 500க்கு 458 மதிப்பெண்கள்
மும்பை: ராதாவின் இளைய மகள் துளசி பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 458 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ராதாவின் இளைய மகள் துளசி மணிரத்னத்தின் கடல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வந்துள்ளது.
அதில் அவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

458/500
துளசி பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 458 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஷூட்டிங் இருந்தும் இவ்வளவு மதிப்பெண்கள்
துளசி முதலில் கடல் பட ஷூட்டிங் தற்போது யான் பட ஷூட்டிங் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையிலும் அவர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

லக்ஷ்மி மேனன்
குட்டிப் புலி நாயகி லக்ஷ்மி மேனனும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். அவர் தேர்வில் தோல்வி அடைந்ததாகவும் ஒரு வதந்தி பரவுகிறது.
Comments


Click it and Unblock the Notifications