Sherin Shringar : ஒரு மாசத்தில் திருமணம்..ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ஷெரின்!

சென்னை : நடிகை ஷெரின் ஒரு மாசத்தில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லி இருக்கிறார்.

பாலில் ஊறவைத்து குலாப் ஜாமுன் போல அழகாக க்யூட்டாக இருக்கும் ஷெரின் பெங்களுரில் பிறந்து வளர்ந்தார்.

இவர், போலீஸ் டாக், துருவா ஆகிய இரண்டு கன்னட படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளார்.

Thulluvadho Ilamai Actress Sherin Shringar to Get Married Soon

நடிகை ஷெரின் : செல்வராகவன் இயக்கத்தில் உருவான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஸ்டூடன்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து பிரபலமான ஷெரின், படவாய்ப்பு குறைந்ததை அடுத்து, பீமா படத்தில் ரங்கு ரங்கம்மா என்ற ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அதன்பிறகும் படவாய்ப்பு வராததால், நண்பேண்டா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக காமெடி காட்சியில் நடித்திருந்தார்.

Thulluvadho Ilamai Actress Sherin Shringar to Get Married Soon

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 : அதன் பின்நீண்ட நாட்கள் சினிமாவில் தென்படாமல் இருந்த ஷெரின், பிக்பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். அவர் தொடர்ந்து தனது ரசிகர்களின் கண்களை கவரும் வகையில் அழகான படங்களை வெளியிட்டு பாலோவர்களை அதிகரித்து வருகிறார்.

ரசிகர்கள் கேள்வி : அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு ஷெரின் பதில் அளித்தார். அதில்,பலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏன் புகழுடன் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அது நிகழ்ச்சிக்காக நடக்கும் சண்டை எல்லாமே ஒரு ஜாலிக்காகத்தான், நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களின் மன அழுத்தத்தைப் போக்க, அவர்களை சிரிக்க வைக்கப்பதற்காக நடத்தப்படுபவை என்றார்.

Thulluvadho Ilamai Actress Sherin Shringar to Get Married Soon

குட் நியூஸ் : திருமணம் எப்போது என்ற ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஷெரின், என்னுடைய ஜாதகத்தின் படி அக்டோபரில் திருமணம் நடக்கும் என்று சொல்லி இருக்காங்க, ஆனால், இன்ஸ்டா பில்டரில் அடுத்த மாதம் என்று வந்திருக்கிறது. அதனால் நான் என்னுடைய திருமணத்தை சீக்கிரமா முடிக்க பிளான் பண்ணி இருக்கேன் என்று கூறியிருக்கிறார். இந்த நல்ல செய்தியை கேட்டு பலர் வாழ்த்து சொன்னாலும், சிலர் உடைந்த இதயத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X