தீப்தி: விஜய் இருந்தாலே போதும்.. கதையெல்லாம் வேணாம் பாஸ்.. விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரீல் தங்கச்சி!

சென்னை: நடிகர் விஜயின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி இரண்டு நாளிலேயே 200 கோடி ரூபாய் அளவில் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் முதல் நாள் வசூலை பெற்றுள்ளது. படத்தின் முதல் நாள் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய்களை கோட் படம் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ள நிலையில் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த காம்பினேஷன் புதிதாக பிரஷ்ஷாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையிலும் சில கலவையான விமர்சனங்களையும் படம் பெற தவறவில்லை. இந்த படத்தை திரையரங்குகளில் சென்று ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர்.

vijay goat movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகி இரண்டு நாட்களிலேயே ஏறக்குறைய 200 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் உருவான கோட் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். விஜய்யுடன் திரிஷாவின் நடனம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது. இதே போல சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு உள்ளிட்டவர்களின் கேமியோ கேரக்டர்களும் படத்தின் வெற்றிக்கு துணை புரிந்துள்ளன.

கோட் படம்: கோட் படம் சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஒரு வாரத்திற்கு சர்வதேச அளவில் திரையரங்குகள் அனைத்தும் ஹவுஸ் ஃபுல்லாக காணப்படுகின்றன. அப்பா -மகன் என இரு வேறு கேரக்டர்களில் விஜய் இந்த படத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டியுள்ளார். இதற்கு பெரிய அளவில் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் துணை புரிந்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மேலும் படத்தில் தொழில்நுட்ப காட்சிகளுக்காக அதிகமாக மெனக்கெட்ட இயக்குநர் வெங்கட்பிரபு, திரைக்கதைக்காகவும் சிறிது சிரமப்பட்டு இருந்தால் படம் தாறுமாறாக இருந்திருக்கும் என்பது தற்போது விமர்சகர்கள் கூறும் கருத்தாக காணப்படுகிறது.

விஜய்யின் ரீல் தங்கச்சி: இந்நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் நேரில் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விஜய்யின் துப்பாக்கி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்த தீப்தி நம்பியார், தற்போது விஜய்யின் படத்தை சென்னையில் பிரபல திரையரங்கில் பார்த்துள்ளார். இந்த படத்தை பார்ப்பதற்காக தான் பூனாவில் இருந்து சென்னை வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒரு படத்தில் விஜய் நடித்தால் மட்டுமே போதும் என்றும் அந்த படத்திற்கு கதை போன்ற எதுவுமே தேவையில்லை என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பயப்படாமல் நடித்த தீப்தி: விஜய் மற்றவர்கள் நினைப்பது போல ரிசர்வ்ட் கேரக்டர் இல்லை என்று தெரிவித்துள்ள தீப்தி, சூட்டிங்கின் இடைவேளைகளில் அவர் சக நடிகர்கள் அனைவரிடமும் மிகச் சிறப்பாக பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி பட சூட்டிங்கின்போது நடந்த சுவாரஸ்யம் ஒன்றையும் தீப்தி பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் தான் கடத்தப்பட்ட நிலையில் தான் கவலையையும் அதிர்ச்சியையும் காட்ட வேண்டும் என்ற நிலையில் தான் சிரித்துக் கொண்டிருந்ததாகவும் கேமராமேன் தன்னை அச்சத்தை வெளிக்காட்டும்படி கூறியதாகவும் ஆனால், விஜய் வந்து தன்னை கண்டிப்பாக காப்பாற்றுவார் என்பதால் தனக்கு பயம் இல்லை என்று கூறி அவரை கலாய்த்ததாகவும் தீப்தி தெரிவித்துள்ளார்.

விஜய்க்குதான் வெற்றி: விஜய்யின் இறுதிப் படங்களில் ஒன்றாக கோட் வெளியாகியுள்ள நிலையில், அவருடன் தான் நடித்து விட்டேன் என்று மகிழ்ச்சி தெரிவித்த தீப்தி அது தன்னுடைய பாக்கியம் என்றும் கூறியுள்ளார். விஜய்யின் TVK கட்சிதான் 2026ம் ஆண்டில் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள தீப்தி, அவரது அனைத்து முயற்சிகளிலும் ரசிகர்கள் அவருடன் துணை நிற்பார்கள் என்று தெரிவித்துள்ளார். துப்பாக்கி படத்தில் மிகவும் சிறிய பெண்ணாக தான் கடத்தப்படுவது கூட தெரியாமல் தனக்கு சல்வார் வாங்கித் தருமாறு கூறுவார் தீப்தி. ஆனால் தற்போது உடல் பெருத்து வேறு லுக்கில் காணப்படும் தீப்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X