டிக் டாக் இலக்கியாவின் 'நீ சுடத்தான் வந்தியா '… ரிலீஸ் தேதி !
சென்னை : டிக் டாக்கில் கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு பிரபலமானவர் இலக்கியா. கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் இலக்கியாவின் வீடியோ பிரபலமானதை அடுத்து இவரது ரசிகர்கள் இவரை டிக்டாக் இலக்கியா என்று ஆசையோடு அழைத்து வருகின்றனர்.
சினிமாவில் நடிப்பதை கனவாக கொண்டிருந்த இலக்கியா முதன்முறையாக நீ சுடத்தான் வந்தியா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தணிக்கைக்குழு இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

டிக் டாக் இலக்கியா
டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் 'நீ சுடத்தான் வந்தியா'.இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார். ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது.இப்படத்தில் கவர்ச்சிநடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார்.

நடிப்பது ரொம்ப கஷ்டம்
அருண்குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் 'நீ சுடத்தான் வந்தியா' படத்தில் நடித்த போது அதை உணர்ந்தேன்என கூறியுள்ளார்.

நடிப்பு மீது காதல்
எனக்கு சினிமா மீது காதல் உண்டு. நடிப்பின் மீதும் ஆர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு ஒரு பயிற்சி தேவை என்று நினைத்தேன். அதனால் நான் கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடி அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு என்னைத் தயார் செய்து கொண்டு பிறகுதான் நடிக்க வந்தேன்.

இலக்கியாவுடன் 3 பாடல்
இப்படத்தில் 5 பாடல்கள். அதில் நானும் இலக்கியாவும் 3 பாடலுக்கு நடனமாடி இருக்கிறோம். இலக்கியா டிக் டாக் வீடியோக்களில் புகழ்பெற்றவர். இலக்கியாவுக்கும் எனக்கும் இது முதல் பாடம். இது காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாகும்.

ரிலீஸ் தேதி
இந்தப் படம் நடிப்பில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது போலவே ரசிகர்களுக்கும் திருப்தி தரும் என்று நம்புகிறேன். இம்மாதம் டிசம்பர் 31 உலகமெங்கும் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











