டிக்டாக் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான மாளவிகா மோகனன்.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: டிக்டாக் செயலி குறித்த ட்வீட் போட்டு டிக்டாக் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Recommended Video

Thalapathy Vijay First Ever Video Call | Master | Malavika Mohanan

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகளும் நடிகையுமான மாளவிகா மோகனன், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துள்ள இவர், பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

டிக்டாக் தடை

டிக்டாக் தடை

இந்தியா சீனா மோதல் வலுத்து வரும் எதிரொலி காரணமாக டிக்டாக், ஷேர் இட், வி சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டிக்டாக் ரசிகர்கள் மற்றும் டிக்டாக் பிரபலங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் போட்ட ட்வீட் டிக்டாக் ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது.

அருவருப்பான

அருவருப்பான

டிக்டாக் பிரபலங்கள் எல்லாம் இப்போது எங்கே செல்வார்கள் என்ற ரசிகை ஒருவரது கேள்விக்கு பதிலளித்த நடிகை மாளவிகா மோகனன், அநேகமாக இதை விட கம்மியான அருவருப்பான செயலிக்குத் தான் போவாங்க என கமெண்ட் செய்துள்ளார். மாஸ்டர் நடிகையின் இந்த கமெண்ட்டை பார்த்த பல டிக்டாக் ரசிகர்கள், அவரை ட்ரோல் செய்தும் திட்டித் தீர்த்தும் வருகின்றனர்.

தலைவி வந்துட்டாடா

தலைவி வந்துட்டாடா

இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த நடிகை மாளவிகா மோகனன், டிக்டாக் செயலியை பயமுறுத்தும் செயலி எனக் கூறி, டிக்டாக் ரசிகர்கள் மத்தியில் கோபத்தைக் கிளறியுள்ளார். எங்க தலைவி வந்துட்டாடா.. என வடிவேலு, ஒரு நபரை கூட்டி வந்து, சாணி அடிக்க வைக்கும் காமெடியை மீமாக போட்டு கலாய்த்து வருகின்றனர்.

யோகியக்காரி வரா

யோகியக்காரி வரா

டிக்டாக் தடையை பலரும் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டாலும், அதை மட்டுமே நம்பி தங்களது பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த பலருக்கும், மாளவிகா மோகனின் இந்த கமெண்ட் கடுப்பை உண்டாக்கி இருக்கிறது. இதனால், கோபம் அடைந்த ஒரு டிக்டாக் பிரியை, "யோகியக்காரி வரா சொம்பு எடுத்து உள்ள வை" என பங்கமாக கலாய்த்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்ல நாம இருக்க ரேஞ்சுக்கு

இன்ஸ்டாகிராம்ல நாம இருக்க ரேஞ்சுக்கு

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் நடிகையாக வலம் வந்தாலும், கவர்ச்சி ததும்ப போட்டோக்களை போட்டாலும், நடிகை மாளவிகா மோகனனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வெறும் 1.5 மில்லியன் ரசிகர்கள் மட்டுமே பின் தொடர்கின்றனர். இதை வைத்து, இந்த நெட்டிசன், "இன்ஸ்டாகிராமில் நாம இருக்க ரேஞ்சுக்கு" என வடிவேலு, பார்த்திபன் மீமை போட்டு கலாய்த்துள்ளார்.

அதை காட்டி சான்ஸ் வாங்கல

அதை காட்டி சான்ஸ் வாங்கல

உங்களை போல யாரும் தனது முன்னழகை தாராளமாக காட்டி எந்த ஒரு சினிமா பட வாய்ப்பையும் பெறவில்லை. டிக்டாக் தடையை பற்றி வேறு விதமாக கமெண்ட் செய்திருக்கலாம். அல்லது பேசாமலேயே இருந்திருக்கலாம். இப்படி கீழ்த்தரமாக கமெண்ட் போட்டிருப்பது தேவையற்ற செயல் என டிக்டாக் ரசிகர்கள் இந்த பேட்ட நடிகையை வறுத்து எடுக்கின்றனர்.

விஜய் ரசிகர்கள் சப்போர்ட்

விஜய் ரசிகர்கள் சப்போர்ட்

மாளவிகா மோகனனை டிக்டாக் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வந்த நிலையில், விஜய் ரசிகர்கள், களத்தில் இறங்கி, ஆமாம், டிக்டாக் ரொம்ப மோசமானது தான். பல குடும்பங்களையும், இளம் பெண்களையும் சீரழித்து வருகிறது. அதனை தடை செய்தது பாராட்டுக்குரிய விசயம் என தங்கள் தலைவிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக கமெண்ட் செய்து காப்பாற்றி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X