Exclusive : நீங்கள் ‘அதற்கு’தயாராக இருந்தால், அவர்கள் பயன்படுத்திக் கொள்வர்: இளம் நடிகை ஓப்பன் டாக்
நாம் தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என இளம் நடிகை மோனிகா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான், மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வர் என மீ டூ குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் இளம் நடிகை மோனிகா சின்னகொட்லா.
ஜீவா படத்தில் திவ்யாவின் தங்கையாக துறுதுறுவென நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கிறதா? அவர் தான் தற்போது டைம் இல்ல படம் மூலம் நாயகியாகியிருக்கும் மோனிகா சின்னகொட்லா.
தன் பட அனுபவங்கள் குறித்தும், மீ டூ விவகாரம் குறித்தும் ஒன்இந்தியாவுக்காக அவர் பேசியதாவது:

காமெடிப் படம்:
"டைம் இல்ல திரைப்படம் எனக்கு 4வது படம். இந்த படத்தில் பள்ளி மாணவியாகவும், ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணாகவும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இந்த படம் ஒரு காதல் காமெடி படம். அதனால் எனக்கும் ஹீரோவுக்கும் இடையேயான காதல் காட்சிகள் காமெடியாக இருக்கும்.

நம்பிக்கை:
தொடர்ந்து பள்ளி மாணவியாகவே நடித்து வந்தேன். ஜீவா, ஜீனியஸ் என இதற்கு முன்பு நான் நடித்த படங்களிலும், பள்ளி மாணவியாக தான் நடித்தேன். நான் சின்ன பெண்ணாக இருப்பதால், இந்த ரோல் எளிதாக செட்டாகிவிட்டது. தற்போது 8 தோட்டாக்கள் படக்குழுவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன்.

திரையுலக குரு:
இயக்குனர் சுசிந்திரன் தான் ஜீவா படம் மூலம் என்னை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு அவர் குரு மாதிரி. எனவே எந்த சந்தேகமாக இருந்தாலும் அவரிடம் தயங்காமல் கேட்டுவிடுவேன். சுசிந்திரன் சார் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார்.

ஒயின் ஆசை:
நான் ஒரு சென்னைப் பொண்ணு. அம்மா தமிழ் அப்பா தெலுங்கு. அதனால் நன்றாகவே தமிழ் பேசுவேன். அதனால் தான் சுசிந்திரன் சார் என்னை ஜீவா படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் நடிக்கும் போது, நானும் எனது அக்காவாக நடித்த ஸ்ரீதிவ்யாவும் ஒரு காட்சியில் ஒயின் குடித்து பார்ப்பது போல் இருக்கும். எனக்கு அப்போது ஒயின் குடிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் நான் சின்ன பெண் என்பதால், இயக்குனர் அனுமதிக்கவில்லை. அதனால் நுகர்ந்து மட்டும் பார்த்துகொண்டேன்.

உஷாராக இருக்க வேண்டும்:
நான் சினிமா குடும்ப பின்னணியில் இருந்து வரவில்லை. சினிமா வாய்ப்பு என்பது எதேச்சையாக அமைந்தது தான். ஆனாலும் பாலியல் ரீதியிலான பிரச்சினைகள் எனக்கு வந்ததில்லை. என்னை பொறுத்த வரை, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான், மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வர். நீங்கள் அதற்கு (செக்ஸ்) தயாராக இருந்தால், அவர்கள் எளிதாக அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வர். எனவே நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்", என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











