த்ரிஷா இப்பவும் ரொம்ப பிஸி… வரிசை கட்டி நிற்கும் படங்கள்

By Mayura Akilan

சென்னை: தமிழ் திரை உலகில் நுழைந்து 15 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இளமை மாறாமல் இருக்கும் நடிகை த்ரிஷா தற்போது கைவசம் 7 படங்களை வைத்துள்ளாராம்.

1999ம் ஆண்டின் சென்னை அழகியாக வெற்றி பெற்று அதே ஆண்டு 'ஜோடி' படம் மூலம் சினிமாவிற்குள் துணை நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் த்ரிஷா. மவுனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஏழு படங்கள்

ஏழு படங்கள்

சினிமாவிற்குள் இவர் நுழைந்து 15 வருடங்கள் கடந்துவிட்டன. சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா? போன்ற படங்கள் த்ரிஷாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தப் படங்கள். இத்தனை ஆண்டுகள் கடந்தும்

இவருக்கு இன்னும் மவுசு குறைந்த பாடில்லை. தற்சமயம் மட்டும் ஏழு படங்கள் த்ரிஷா வசமிருக்கிறது.

பூலோகம் தயார்

பூலோகம் தயார்

ஜெயம் ரவியுடன் நடித்து 'பூலோகம்' படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. ஜெயம் ரவி, அஞ்சலி நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் இன்னொரு நாயகி த்ரிஷா தான். இதன்மூலம் மூன்றாவது முறையாக ஜெயம்ரவி ஜோடியாகிறார்.

தமிழில் 5 படங்கள்

தமிழில் 5 படங்கள்

பூலோகம் தவிர பாலிவுட்டின் குயின் படத்தின் தமிழ் ரிமேக் என தமிழில் மட்டும் 5 படங்கள் கைவசம் உள்ளன.

அஜீத் ஜோடியாக

அஜீத் ஜோடியாக

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்தின் 55வது படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா.

ஜெய் ஜோடியாக

ஜெய் ஜோடியாக

மணிமாறன் இயக்கத்தில் ஜெய் படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் ஒன்று

தெலுங்கில் ஒன்று

தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

கன்னடத்தில் அறிமுகம்

கன்னடத்தில் அறிமுகம்

தெலுங்கில் வெற்றிபெற்ற 'தூக்குடு' படத்தின் கன்னட ரீமேக் 'பவர்' படத்தில் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்து விரைவில் வெளிவர உள்ளது. 'பவர்' த்ரிஷாவின் முதல் கன்னட படமாகும்.

கைகொடுக்காத பாலிவுட்

கைகொடுக்காத பாலிவுட்

தமிழ், தெலுங்கில் ஹிட்டடித்த த்ரிஷாவினால் ஏனோ பாலிவுட் பட உலகில் ஜொலிக்க முடியவில்லை. கட்டா மிட்டா படம் கடமுடாவானதில் மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்பிவிட்டார்.

ரஜினியுடன் ஜோடி

ரஜினியுடன் ஜோடி

இத்தனை ஆண்டுகாலம் நடித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேரமுடியவில்லை என்பதுதான் அம்மணியின் சோகம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X