»   »  நடிக்க வாய்ப்பு கொடுத்து படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்: சொல்கிறார் சரத்குமார் ஹீரோயின்

நடிக்க வாய்ப்பு கொடுத்து படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்: சொல்கிறார் சரத்குமார் ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: படுக்கையை பகிர நினைத்த தயாரிப்பாளரிடம் இருந்து தான் புத்திசாலித்தனமாக தப்பியது எப்படி என்பதை பாலிவுட் நடிகை டிஸ்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆமிர் கான் நடித்த தாரே ஜமீன் பர் படத்தில் கற்றல் குறைபாடு உள்ள சிறுவனின் தாயாக நடித்து பிரபலம் ஆனாவர் டிஸ்கா சோப்ரா. 1993ம் ஆண்டு சரத் குமார் நடிப்பில் வெளியான ஐ லவ் இந்தியா படத்தில் டிஸ்கா தான் ஹீரோயின்.

இந்நிலையில் டிஸ்கா பட வாய்ப்புக்காக தயாரிப்பாளருடன் படுக்கையை பகிர்வது பற்றி கூறுகையில்,

பெரிய தயாரிப்பாளர்

பெரிய தயாரிப்பாளர்

என் துவக்க காலத்தில் கையில் படம் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது தான் பாலிவுட்டின் பெரிய தயாரிப்பாளரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

சந்திப்பு

சந்திப்பு

நான் ஹை ஹீல்ஸ் அணிந்து அந்த தயாரிப்பாளரை சந்திக்க மகிழ்ச்சியாக சென்றேன். பாலிவுட்டின் பெரிய தயாரிப்பாளர் ஆச்சே, அதனால் மகிழ்ச்சியில் இருந்தேன். என்னை பார்த்த அவர் ஹீல்ஸ் அணிந்து நடப்பது எப்படி என்று நீ கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஒரு பெரிய தயாரிப்பாளர் நம் மீது அக்கறை கொண்டு சொல்கிறாரே என்று மகிழ்ந்தேன். அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். உடனே துள்ளி குதித்து ஓடி வந்து எனது தோழிகளிடம் தெரிவித்தேன்.

அய்யய்யோ

அய்யய்யோ

அந்த தயாரிப்பாளர் படத்திலா நடிக்கப் போகிறாய் என்று தோழிகள் அதிர்ச்சியாக கேட்டனர். ஏன் என்றதற்கு, அவரின் படத்தில் நடிக்கும்போது அவரது படுக்கையையும் பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்று ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டனர்.

நட்பு

நட்பு

முதலில் மும்பையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தயாரிப்பாளரின் மனைவி, அவரின் துணை இயக்குனர் மகனுடன் நட்பானேன். அப்படியாவது தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைக்க மாட்டார் என நினைத்தேன்.

வெளிநாடு

வெளிநாடு

படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு ஷூட்டிங்கிற்கு சென்றோம். நானும், தயாரிப்பாளரும் ஒரே ஹோட்டலில், ஒரே தளத்தில் இருந்தோம். மூன்றாம் நாள் படப்பிடிப்புக்கு பிறகு அவர் என்னை இரவு நேரத்தில் தனது அறைக்கு வருமாறு கூறினார்.

போன் அழைப்பு

போன் அழைப்பு

தயாரிப்பாளரின் அறைக்கு செல்வதற்கு முன்னதாக நான் ஹோட்டல் ஊழியர்களிடம் அவரின் அறைக்கு டெலிபோனில் கால் மேல் கால் செய்யுமாறு கூறினேன். அவர்களும் போன் செய்தார்கள். தயாரிப்பாளர் கடுப்பாகிவிட்டார். அதனால் நான் தப்பித்துக் கொண்டேன்.

rn

தமிழ் இயக்குனர்

என் தோழியை கூட தமிழ் இயக்குனர் ராஜா என்பவர் தன்னுடன் ஷூட்டிங் ஸ்பாட் பார்க்க புதுச்சேரிக்கு வருமாறு கூறியுள்ளார். அதாவது திரைக்கதை எனது தோழியின் அங்கம் முழுவதும் பாய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Bollywood actress Tisca Chopra has talked about casting couch and how she cleverly escaped it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil