புதுவீடு... க்யூவில காரு... கலக்கறாங்க ஆசின்!

இப்போதைய நிலவரப்படி தனது காருக்கு முன்னே 2 கார்கள், பின்னே 2 கார்கள் என அரசியல்வாதிகளைத் தோற்கடிக்கும் அணிவகுப்புடன் செல்கிறாராம் ஆசின்.
ஆமீர்கானுடன் கஜினி என்ற ஒரே படத்தில்தான் நடித்துள்ளார் ஆசின். ஆனால் மீடியாவின் புண்ணியத்தில் மற்ற பெரிய நடிகைகளையே ஓரம் கட்டி முன்னணிக்கு வந்துள்ளார்.
தன்னுடைய புது ரேஞ்சுக்கு ஏற்ப இப்போது அவரும் மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை எந்த இந்தி நடிகையும் செய்யாத அளவுக்கு 4 கார்கள் அணிவகுப்புடன்தான் அசின் புறப்படுகிறாராம். அதில் 2 கார்கள் கேரளாவில் பதிவு எண்கள் கொண்டதாம். மற்ற 2 கார்களும் மும்பை பதிவுடன் உள்ளன. 2 கார்களில் தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்புக்கு செல்வதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி ஆசினிடம் கேட்டபோது, 4 கார்கள் அணிவகுப்பு என்பது கொஞ்சம் ஓவர். ஆனால் எங்கு சென்றாலும் நான் 2 அல்லது 3 கார்களில்தான் செல்வேன் (!?). ஒரு காரில் நானும், எனது தந்தையும் இருப்போம். மற்றொரு காரில் எனது மேக் அப் மேன், சிகை அலங்கார நிபுணர், உதவியாளர்கள் இருப்பார்கள். சமயத்தில் செக்யூரிட்டுகள் வந்தால் அவர்களுக்கு தனி கார்.
எங்கு சென்றாலும் அவர்கள் என்னுடனே வருவார்கள். நடிப்பை ஒரு தொழிலாக மதிக்கிறேன். அதில் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் எல்லோரும் என்னைச் சுற்றி இருக்கின்றனர்.
கஜினி பட விளம்பரத்துக்காக சென்றபோது எக்ஸ்ட்ராவாக 2 கார்கள் வந்திருந்தன. அது எப்படி என் கணக்கில் சேரும்... அதை தயாரிப்பாளரிடம்தான் கேட்க வேண்டும், என்றார்!!
அப்படி போடு அறுவாள!!


Click it and Unblock the Notifications











